அண்ணாமலை வருங்காலத்தில் நிச்சயம் தமிழக முதல்வராவார்... திருச்சி சூர்யா ஆருடம்!!

Published : Mar 19, 2023, 12:09 AM IST
அண்ணாமலை வருங்காலத்தில் நிச்சயம் தமிழக முதல்வராவார்... திருச்சி சூர்யா ஆருடம்!!

சுருக்கம்

அண்ணாமலை வருங்கால தமிழகத்தின் முதல்வராக வருவார் என்று திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார். 

அண்ணாமலை வருங்கால தமிழகத்தின் முதல்வராக வருவார் என்று திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், தனித்து நின்றால் தான் பலம் தெரியும்.  கூட்டணியில் இருந்ததால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அதே அவர் தனித்து நின்றிருந்தால் முதலமைச்சராகி இருப்பார். எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் ஜானகி அம்மாள் - ஜெயலலிதா என்று இரண்டு அணிகளாக அதிமுக பிரிந்த போது ஜெயலலிதா பக்கம் யாருமே போகவில்லை.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்ட விரோதம்: தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

ஆனால் அவர்தான் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தார். திமுகவிலிருந்து எம்ஜிஆர் விலகிச் சென்ற போது எம்ஜிஆர் பின்னால் யாரும் செல்லவில்லை. என்னைக் கூட அழைத்தார் ஆனால் நான் போகவில்லை என்று துரைமுருகன் கூறுகிறார். வைகோ திமுகவில் இருந்து வெளியேறியபோது கூட அவர் பின்னால் திமுகவில் இருந்து பலர் சென்றனர். ஆனால், எம்ஜிஆர் பின்னால் திமுகவிலிருந்து யாரும் செல்லவில்லை. ஆனால் அவர் ஜெயிக்கவில்லையா? 

இதையும் படிங்க: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்... அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!!

மக்கள் ஆதரவு தான் முக்கியம். மக்கள் ஆதரவு இருந்தால் ஜெயிக்கலாம்.  அண்ணாமலைக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. நிச்சயம் அவர் வருங்கால தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!