இபிஎஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு செக் வைக்க ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.. நாளை என்ன நடக்கும்? திக்.. திக்..!

By vinoth kumarFirst Published Mar 18, 2023, 3:02 PM IST
Highlights

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த  மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அவசர வழக்காக விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த  மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள் தொடர்பாக அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு,  விசாரணை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரட்டை தலைமையை ஒழித்து ஒற்றை தலைமை உருவாக்கியது தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய  வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொது செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

இந்த அவசர முறையிட்டை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, இந்த அவசர மனுவை  நீதிபதி கே.குமரேஷ் பாபு நாளை விசாரிக்க அனுமதி அளித்துள்ளார்.  இதன்படி மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக நாளை காலை 10 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த விசாரணைக்கு பிறகு பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை வருமா என்பது தெரியவரும். 

click me!