தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெறுவதற்குரிய உத்திகள் என்னிடம் உள்ளது. ஒருவேளை தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது.
பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என அண்ணாமலை கூறிய நிலையில் தனித்து போட்டி இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, அண்ணாமலை பேசுகையில்;- தமிழக பாஜகவை இதுவரை இல்லாத அளவுக்கு வளர்த்தெடுப்பது என்பது தான் எனது திட்டம். அதற்காகத்தான் நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
undefined
தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெறுவதற்குரிய உத்திகள் என்னிடம் உள்ளது. ஒருவேளை தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன்;- அதிமுக கூட்டணி குறித்து அண்ணாமலை தெரிவித்திருப்பது அவரது சொந்த கருத்து. கூட்டணி தொடர்பாக பாஜக தேசிய தலைமை முடிவு செய்யும். தமிழகத்தில் இதுவரை யாரும் தனித்து போட்டியிட்டது கிடையாது. தனித்து போட்டியிடுவோம் என அறிவிக்கவும் முடியாது. இதுவே தமிழகத்தின் அரசியல் வரலாறு. பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என அண்ணாமலை கூறிய நிலையில் தனித்து போட்டி இல்லை என கூறியிருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.