களையெடுக்கும் பணியை ஆரம்பித்த அண்ணாமலை.. தமிழக பாஜகவில் அதிரடி ஆரம்பம்...

By Ezhilarasan BabuFirst Published Aug 3, 2021, 9:22 AM IST
Highlights

இதனை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக வந்த செய்தி மூலமாகவே எனக்கு தெரியவந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் இதுவரை கட்சி தலைமையில் இருந்து எனக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை என்று தெரிவித்தார்.

பாஜக மாநில  தலைமை என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக எனக்கு தகவல் வரவில்லை ஆனாலும் பாஜகவில் தான் இருப்பேன் என எஸ்.தணிகைவேல் தெரிவித்துள்ளார். பாஜக திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வணிக பிரிவின் மாநில துணை தலைவராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருப்பவர் எஸ். தணிகைவேல். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், எந்தவித செயல்பாடுகளும் இல்லாத கரணத்தினாலும்  திரு.தனிகவேலை பாஜகவின் கட்சி பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பிணிரலிருந்தும் நீக்கப்படுவதாக பாஜக தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளதாக  ஊடங்கங்கள் வாயிலாக வெளிவந்தது.

இதனை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக வந்த செய்தி மூலமாகவே எனக்கு தெரியவந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் இதுவரை கட்சி தலைமையில் இருந்து எனக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை என்று தெரிவித்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தான் வெளியூரில்  இருப்பதாகவும்  சென்னைக்கு வரும் 10ஆம் தேதி தான் வரவுள்ளதாக தெரிவித்தார். எனவே வரும் பத்தாம் தேதி அன்று தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து நீக்கப்பட்ட காரணம் குறித்து பேச உள்ளதாகவும் கூறினார்.

மாற்று கட்சி இணைய வாய்ப்பு உள்ளதா குறித்த கேள்விக்கு பதிலளித்த தணிகைவேல் என் உயிர் இருக்கும் வரையில் பாஜகவின் தான் இருப்பேன் ஒரு துளி அளவு கூட மாற்று கட்சியுடன் சேர மாட்டேன் என்றும் கூறினார். பாஜகவின் மாநில வர்த்தக அணியில் பணியாற்றி இன்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது திருவண்ணாமலை, விழும்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர்  மாவட்டம், திருப்பத்தூர், வாணியம்பாடி நான்கு சட்டமன்றத் தொகுதியில் பல கோடி ரூபாய் கட்சிக்காக செலவு செய்து வருவதாகவும் அதற்கான ஆதாரங்களை பட்டியலிட்டு காட்ட முடியும் என தெரிவித்தார்.

அண்ணாமலை பாஜக மாநிலத்தலைவராக பதவியேற்றது முதல் கட்சியில் தொண்டர்கள் மத்தியில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை அக்கட்சி தொண்டர்களே கூறுவதை கேட்க முடிகிறது. அதே நேரத்தில்  இயல்பிலேயே அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தவர் என்பதால், கண்டிப்புடன் செயல்படுவார் என விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கட்சியில் சரியாக செயல்படாதவர்கள், மற்றும் பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாதவர்கள், கட்சியின் பெயரை தவறான பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டு அவர்களை கட்சியில் இருந்து களையெடுக்கும் பணியில் அவர் இறங்கியுள்ளார். மிகப்பெரிய சவால்கள் அவரை நோக்கி இருப்பதால் கட்சியை சீரமைக்கும் பணிகளில் அவர் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளதாக கட்சி வட்டாரத்தில் பரபரக்கப்படுகிறது. அண்ணாமலை ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் என கட்சியில் ஒரு தரப்பினர் உற்சாகமடைந்திருந்தாலும் , சிலருக்கு அது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 
 

click me!