துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதா... திமுக அரசின் அரசியல் காழ்புணர்ச்சி... அண்ணாமலை விமர்சனம்!!

Published : Apr 25, 2022, 06:17 PM IST
துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதா... திமுக அரசின் அரசியல் காழ்புணர்ச்சி... அண்ணாமலை விமர்சனம்!!

சுருக்கம்

மாநில அரசே துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதாவை தீர்மானம் செய்த செயல் அரசியல் காழ்புணர்ச்சியை காடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சனம் செய்துள்ளார். 

மாநில அரசே துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதாவை தீர்மானம் செய்த செயல் அரசியல் காழ்புணர்ச்சியை காடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் துணை வேந்தர்கள் மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை தயார் செய்து இருக்கிறார். பாஜக இந்த மசோதாவை அங்கேயே எதிர்த்தது. திமுக அரசு துணை வேந்தர் என்ற பதவியை வியாபாரமாக அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கும் கொடுக்கும் பதவியாக வைத்து உள்ளது. திமுக இதற்கு முன்பே துணை வேந்தர்களை எந்த அளவிற்கு வியாபாரமாக மாற்றி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பல நல்ல துணை வேந்தர்களை ஆளுநர் நியமனம் செய்துள்ளார். இருப்பினும் ஆளுநரே எந்த துணை வேந்தர்களையும் நேராக நியமனம் செய்ய வில்லை.

தேர்வுக் குழுவின் பரிசீலனையிலும் இது நடைபெறுகிறது. இதில் மாநில அரசின் தலையீடும் உள்ளது. இந்த செயல் திமுக அரசியல் காழ்புணர்ச்சியுடன் இதை நடைமுறை செய்கிறது. ஹெச்.ராஜா கேரளா ஆளுநராக வர உள்ளாரா என்பதை குறித்து எனக்கு தெரியாது. நான் தேர்வுக் குழுவில் இல்லை. இருப்பினும் ஹெச்.ராஜா ஒரு நல்ல மனிதர் அவருக்கு கவர்னர் பதவி கிடைத்தால் சந்தோஷமே. ஆளுநர் மாளிகையில் பல்வேறு அரசியல் பணிகள் நடைபெற்று வருகிறது.

அவற்றை எல்லாம் விடுதலை சிறுத்தை கட்சி நபர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக பாஜக சார்பாக  TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஒருநாள் இலவச பயிற்சிக்காக தாமரை இலவச போட்டித் தேர்வு என்ற மையத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துவங்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர், 40 ஆண்டு காலம் அனுபவத்துடன் ஐ.பி.எஸ் ஆக உள்ளவருக்கும் குரூப் 4 புதிதாக இருக்கும். குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் புதிதாக உள்ளது. காலம் வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. குரூப் 4 தேர்வில் காலி இடங்கள் 7500 மட்டுமே உள்ளது. ஆனால் எழுதும் நபர்கள் 2 லட்சம் பேர்கள் உள்ளார்கள் என்று நினைப்பது குறுகிய மனப்பான்மை. ஆனால் இந்த பரிட்சையை நீங்கள் முழுமனதுடன் அணுக வேண்டும் என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தங்கமணி போறார்.. சி.வி. சண்முகம் போறார்... நீ விளக்கு புடிச்சு பாத்தியா..? பொதுக்குழுவில் உக்கிரமாக மாறிய C.V.S
அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்வதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது..! எடப்பாடி பழனிசாமி சூளுரை