நான் உண்மையை சொன்னால் பல உயர் அதிகாரிகளின் பதவி பறிபோகும்.. கோவை சம்பவம் குறித்து பகீர் கிளப்பும் அண்ணாமலை.!

By vinoth kumar  |  First Published Oct 29, 2022, 1:30 PM IST

கடலூரில் செய்தியாளர்களை அவதூறாக பேசவில்லை. ஒரு பகுதியை மட்டும் கத்தரித்து  பொய்யான செய்தியை பரப்பியுள்ளனர். நான் செய்தியாளர்களிடம் பேசியது தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டது என அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.


கடலூரில் செய்தியாளர்களை அவதூறாக பேசவில்லை. ஒரு பகுதியை மட்டும் கத்தரித்து  பொய்யான செய்தியை பரப்பியுள்ளனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை;- கோவையில் முழு கடையடைப்புக்கு பாஜக மாநில தலைமை நிர்பந்திக்காது. கோவை பந்த் குறித்து மாவட்ட பாஜக மற்றும் மக்கள் முடிவு செய்ய வேண்டும். கோவை வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்காமல் 4 நாட்கள் தாமதப்படுத்தியது ஏன்? மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என டிஜிபி கூறுகிறார். அக்டோபர் 18ம் தேதியே மத்திய உளவுத்துறை மாநில அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது. 18ம் தேதி தகவல் வந்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி அண்ணாமலை எழுப்பியுள்ளார். 

Latest Videos

மேலும், என்னிடம் உள்ள ஆதாரங்களை என்.ஐ.ஏவிடம் கொடுக்க தயார். மாநில அரசு சம்மன் அனுப்பினால் ஆதாரங்களை கொடுக்கிறேன். ஆதாரங்களை கொடுத்தால் பல உயர் அதிகாரிகளின் பதவி பறிபோக வாய்ப்புள்ளது. கடலூரில் செய்தியாளர்களை அவதூறாக பேசவில்லை. ஒரு பகுதியை மட்டும் கத்தரித்து  பொய்யான செய்தியை பரப்பியுள்ளனர். நான் செய்தியாளர்களிடம் பேசியது தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டது என அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

பாஜக மகளிரணி நிர்வாகிகளை பற்றி திமுக நிர்வாகி ஆபாசமாக பேசி உள்ளார். உடனே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். திமுக நிர்வாகியின் ஆபாச பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்.பி.கனிமொழிக்கு அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். 

click me!