நாய்,பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் பதிலளிக்க முடியாது..! செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Oct 27, 2022, 3:37 PM IST

தமிழகத்தில் முதல்முறையாக தற்கொலை படைத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.  இது குறித்த வாய்  திறக்க தமிழக முதல்வர் மறுப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.


ஆங்கிலத்தை திணிக்க திமுக திட்டம்

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம் நடத்திய நிலையில், திமுக தமிழை அழிப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூரில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தி எதிர்ப்பு என்பது காலிகள் சேர்ந்து நடத்தும் வெங்காய அரசின் போராட்டம் என பெரியார் அன்றே கூறினார், திமுகவின் இந்தி எதிர்ப்பு என்பது ஆங்கிலம் வேண்டும் என்பதற்காகவே தவிர தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல என தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற 10 வது தேர்வு முடிவில் தமிழில் 48 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இது சரித்திரத்தில் முதல் தடவை என்றார். இந்தி திணிப்பு என்பது டிராமா அரசியல் என விமர்சித்தவர் இந்தி திணிப்பு என்பது ஆங்கிலத்தை திணிப்பதே திமுகவின் நோக்கம் என கூறினார். 

Tap to resize

Latest Videos

வெடி பொருட்களை பிலிப்கார்ட், அமேசானில் வாங்கிய அப்ஸர் கான்..! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

எமி ஜாக்சன், ஹன்சிகா மோத்வானி ஆகியோருடன் திமுகவின் பட்டத்து இளவரசர் அடுத்தடுத்து படங்களை நடித்தார். தமிழில் உள்ள ஒரு சகோதரி கூட நடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார். இந்தி திணிப்பு என தமிழை அழிக்க திமுக முயற்சித்தால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார். திமுக இத்தனை ஆண்டுகள் தமிழை வைத்து வியாபாரம்  செய்துள்ளது என குற்றம் சாட்டியவர்,தமிழகத்தில் அனைத்து மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். கோவையில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை வாய் திறந்து பேச மறுப்பதாக கூறியவர்,, தற்கொலை படை தாக்குதலை சிலிண்டர் கேஸ் வெடிப்பு என கூறப்படுவது வெட்கக்கேடானது  என கூறினார்.

 

பாஜகவின் கிளைப்பிரிவு போல செயல்படும் என்ஐஏ..! கோவை சிலிண்டர் வெடி விபத்தை ஒப்படைத்தது தவறு- சீமான் ஆவேசம்

ஆர்பாட்டத்திற்கு பிறகு அண்ணாமலையிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முற்பட்டனர். அப்போது மரத்து மேல் குரங்கு தாவுவது போல் சுற்றி சுற்றி வருகிறீர்கள் என நிருபர்களை அண்ணாமலை விமர்சித்தார். தொடர்ந்து பேசியவர்   நாய்,பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் தன்னால் பதிலளிக்க முடியாது எனக்கூறி அண்ணாமலை கோவமாக புறப்பட்டு சென்றார். 

இதையும் படியுங்கள்

கோவை கார் வெடி விபத்து..! பாஜக தலைவர் அண்ணாமலையை தான் முதலில் என்ஐஏ விசாரிக்க வேண்டும்..! செந்தில் பாலாஜி

 

click me!