பிடிஆர் பேசிய ஆடியோ பொய்யானதா.? நான் பேசுவது போல் ஒலிநாட தயாரித்து வெளியிட முடியுமா.? சவால் விட்ட அண்ணாமலை

Published : Apr 23, 2023, 09:34 AM IST
பிடிஆர் பேசிய ஆடியோ பொய்யானதா.? நான் பேசுவது போல் ஒலிநாட தயாரித்து வெளியிட முடியுமா.? சவால் விட்ட அண்ணாமலை

சுருக்கம்

 உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் அமைச்சர் பிடிஆர் பேசியிருந்த ஒலி நாடாவின் உண்மைத் தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி, தமிழக பாஜக தலைவர்கள் குழு ஆளுநர் ரவியை சந்தித்து பேச இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்

உதயநிதி, சபரீசன் சொத்து.?

உதயநிதி மற்றும் சபரீசன் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பிடிஆர் பேசியது ஒன்ற ஆடியோ ஒன்றை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதனை மறுத்த பிடிஆர். எனது குரலை தவறாக எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ஒலிநாடா உண்மை தன்மை ஆராயப்பட்டுள்ளதாவும் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டார். இந்தநிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழக நிதியமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான திரு. மு.க.ஸ்டாலினின் மகன் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் திரு. சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் பேசியிருந்த ஒலி நாடாவின் உண்மைத் தன்மையை, 

போலியான ஒலிநாடாவா.?

சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி, தமிழக பாஜக தலைவர்கள் குழு ஒன்று, மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களை இன்று சந்திக்கவுள்ளது,தமிழக நிதியமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், இந்த ஒலி நாடா பொய்யானது, யார் குரலில் வேண்டுமானாலும் இப்படிப் பேசி வெளியிட முடியும் என்று சமாளித்துக் கொண்டிருப்பதால், அவர் அந்த ஒலி நாடாவில் பேசிய அதே கருத்துக்களை நான் பேசுவதைப் போல ஒரு ஒலி நாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன். என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார். தமிழக நிதி அமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்கவேண்டும். இரண்டு ஒலி மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். இரண்டு ஒலி நாடாக்களின் உண்மைத் தன்மையை, நீதிமன்றம் விசாரித்துக் கூறட்டும்.

ஆளுநரை சந்திக்கும் பாஜக குழு

காலாகாலமாக பதவிகளை எல்லாம் வாரிசுகள் அனுபவித்துக் கொண்டு, தனது கட்சித் தொண்டர்களை போஸ்டர் மட்டுமே ஒட்ட வைத்து ஏமாற்றுவது போல, இது அத்தனை எளிதானதல்ல என்பதை தமிழக நிதியமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சொல்லும் விசித்திரக் கதைகளை, வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால் நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு, நம் தமிழக மக்கள் ஒன்றும் திமுகவினர் அல்ல; அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் தமிழக நிதியமைச்சரை மிக பணிவன்புடன் கேட்டுகொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

PTR Audio: நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது! நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?