அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதா.? எத்தனை இடத்தில் போட்டி.? அமித்ஷாவுடன் பேசியது என்ன.? அண்ணாமலை பரபரப்பு தகவல்

By Ajmal Khan  |  First Published Apr 2, 2023, 3:34 PM IST

எப்போதும், எங்கேயும் அதிமுக கூட்டணியில் இல்லையென நான் கூறவில்லை என தெரிவித்துள்ள அண்ணாமலை, கூட்டணியில் முக்கிய அங்கமாக அதிமுக இருப்பதாக தெரிவித்தார். மேலும் எந்த கட்சி மீதும் பாஜகவிற்கு கோபம் இல்லையெனவும் கூறினார். 


அதிமுக-பாஜக கூட்டணி

தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதிற்கு பதில் அளித்த அவர், அமித்ஷா சொன்ன கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். கூட்டணியில் இருக்கிறோம் என அமித்ஷா கூறினாரே தவிர, கூட்டணி உறுதி செய்யவில்லையென கூறினார்.பாஜகவை வழிநடத்திச் செல்வது தலைவராக என்னுடைய கடமை. கூட்டணியை முடிவு செய்வது அமித்ஷா ஜி மற்றும் நட்டா ஜி போன்றோர் தான். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அமித்ஷாவிடன் தனியாக பேசிவிட்டு வந்துள்ளேன்.

Latest Videos

அமித்ஷாவுடன் பேசியது என்ன.?

அப்போது தொண்டர்கள் விருப்பம் என்ன.? தலைவர்களோடு விருப்பம் என்ன தெரிவித்தேன். அப்போது  2024, 2026, 2030 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்ற கருத்துக்களை அமித்ஷா உடனான சந்திப்பின்போது தெரிவித்திருக்கிறேன். எப்போதும், எங்கேயும் அதிமுக கூட்டணியில் இல்லையென கூறவில்லை. நமது கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ளனர். எந்த கட்சி மீதும் பாஜகவிற்கு கோபம் இல்லை.  கூட்டணியில் நிறைய கட்சிகள் வந்துள்ளது.  2024 ஆம் ஆண்டு தேர்தலில் நான் நின்றால் கிளீன் பாலிடிக்ஸ் பார்ப்பீர்கள் என கூறிய அவர் தேசியத் தலைவரின் முடிவுகளுக்கு கட்டுப்படுவேன் எனவும் தெரிவித்தார்.

தேர்தலுக்கு 9 மாதம் உள்ளது

பாஜகவில் இப்படி செல்ல வேண்டும் என ஒரு சிலரின் நினைப்பு உள்ளது. பாஜகவின் வளர்ச்சி எனக்கு முக்கியம். எத்தனை சீட்டு, பாஜகவின் கொள்கை, எந்த இடத்தில் நிற்க வேண்டும் என பல கருத்துகள் உள்ளது. அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் கிடையாது. தண்ணீரில்எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம்.  மாநிலத் தலைவராக என்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறேன். 9 மாதங்கள் இருக்கிறது இப்போதே கூட்டணி தொடர்பாக கூற முடியாது. கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற இலக்கில் பயணிக்க தொடங்கி விட்டேன். 25 தொகுதிகள் வெற்றி பெறும் அளவிற்கு பாஜக  பலமாக இருக்க வேண்டும்.தேர்தல் சீட்டு ஒதுக்கப்பட்ட பிறகு தான் கூட்டணி உறுதிப்படுத்தப்படும். அது வரை எதையும் உறுதியாக கூற முடியாது.

ரபேல் வாட்ச் பில் எப்போது வெளியிடப்படும்.?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,எஸ் பி வேலுமணியை சந்தித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,  விமான நிலையத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தது மட்டுமே. அரசியல் ரீதியாக எதுவும் கிடையாது என கூறினார். ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்,  வாட்ச் பில் அனைத்தும் வெளியிடப்படும் என கூறினார்.  வானதி சீனிவாசன் உட்பட அனைவரும் இந்த கட்சியை வளர்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். பாஜக தனித்து போட்டியிட வேண்டும்  என பொதுவெளியில் நான் எங்கும் கூறவில்லை.

கட்சி வளர்வதற்கு என்று எனக்கு தனி இலக்கு இருக்கிறது. அது கூட்டணியா இல்ல தனித்தா என்பதை தேசிய தலைமை முடிவு செய்யும். இன்றைய தேதியில் சீட் ஒதுக்கீடு தொடர்பாக பேச வேண்டிய தேவை இல்லை. ஒருங்கிணைந்த அதிமுக ஒருங்கிணைப்பு இல்லாத அதிமுக என சொல்வதற்கான உரிமை எனக்கு கிடையாது. கட்சியுடன் தான் கூட்டணி. தனி மனிதருடன் கூட்டணி கிடையாது என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு உயிர் பலி.! ஆளுநர் ரவி தான் முழு பொறுப்பேற்க வேண்டும் -செல்வப் பெருந்தகை
 

click me!