Rafael Watch : டீக்கடையில் எப்போது ரபேல் வாட்ச் பற்றி பேசுகிறார்களோ அப்போது பில்லை வெளியிடுவேன்- அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Dec 21, 2022, 3:53 PM IST

ரபேல் வாட்ச் தொடர்பாக எப்போது டீ கடையில் பேசுகிறார்களோ அப்போது அதற்கான பில்லை வெளியிடுவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


ரபேல் வாட்ச் - திமுக,பாஜக மோதல்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. குறிப்பாக அந்த 10 லட்சம் என்றும் 15 லட்சம் என்றும் விவாதிக்கப்பட்டது. இதற்க்கு பதில் அளித்த அண்ணாமலை, வாட்ச் ரபேல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும் விமானத்தின் உதிரி பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்டதாகவும் உலகத்திலேயே வெறும் 500 வாட்ச்கள் மட்டும் இருப்பதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆடு மட்டுமே எனது சொத்து என கூறிவரும் அண்ணாமலை 5லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் வாங்கியது எப்படி என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கான பில்லை வெளியிட வேண்டும் என கூறியிருந்தார்.

Tap to resize

Latest Videos

அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி

undefined

இதனை தொடர்ந்து அண்ணாமலை கூறுகையில், ரபேல் வாட்ச் தொடர்பான பில்லை ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாத யாத்திரையில் வெளியிட இருப்பதாக கூறினார். மேலும் அப்போது திமுக அமைச்சர்கள் மற்றும் உறவினர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிட இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதனையடுத்து மீண்டும் டுவிட்டர் பதிவிட்ட செந்தில் பாலாஜி,  பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? ஏப்ரலில் பட்டியல் வரும்… மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது என நக்கலடித்திருந்தார்.

இபிஎஸ் தாக்கல் செய்த அதிமுகவின் வரவு, செலவு கணக்கு..! அங்கீகரித்ததா தேர்தல் ஆணையம்..? அதிர்ச்சியில் ஓபிஎஸ்

டீ கடையில் பேசும் போல் பில் வரும்

இதனையடுத்து  இன்று கோவையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, டீக்கடையில் எப்போது ரபேல் விவகாரம் குறித்து பேசுகிறார்களோ அன்றைக்கு வாட்ச்சின் பில்லை வெளியிடுகிறேன் என தெரிவித்தார். ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லாதவர்கள் நம் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.  2ஜி விவகாரம் எப்படி திமுகவை 10 ஆண்டுகள் ஆட்சியில் அமர விடமால் செய்ததோ அதே போல் மீண்டும் நிகழும் என தெரிவித்தார். பொதுமக்கள் திமுக ஊழல் பற்றி தெரிவிக்க ஒரு website தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் திமுக அமைச்சர்களுக்கு உள்ள பினாமிகள் குறித்து அதில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

டூ ஆர் டை தேர்தல்..! திமுகவிற்கு முடிவுரை..! தமிழகத்தில் 25 எம்பிக்களை பெறுவதே இலக்கு - அண்ணாமலை உறுதி

click me!