மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் பொறுப்பு ஆளுநராக இருக்கும் இல.கணேசன் இல்ல விழாவில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டதால் தான் அந்த நிகழ்வில் தாம் பங்கேற்கவில்லையென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இல.கணேசன் இல்ல விழா
தமிழக பாஜகவின் மூத்த தலைவராக இருந்த இல.கணேசன் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பொறுப்பு ஆளுநருமாக இல. கணேசன் உள்ளார். இவருடைய சகோதரர் இல கோபாலனின் 80 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் கடந்த வியாழக்கிழமை நடந்தது. இந்த விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டாலும் அதனை மறந்து தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உடல்நலம் விசாரித்துக்கொண்டனர்.
அண்ணாமலை செல்லாதது ஏன்.?
இல.கணேசன் முன்னாள் பாஜக தலைவராக இருந்தவர்கள் என்ற காரணத்தால் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். இதனிடையே இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளாதது கேள்வியை எழுப்பியது. பாஜகவில் மூத்த தலைவர்களுக்கிடையே உள்ள மோதல் காரணமாகத்தான் அண்ணாமலை செல்லவில்லையென கூறப்பட்டது. இதனிடையே இது தொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதில் அளித்த அண்ணாமலை, பாஜக மாநில தலைவராக இல.கணேசன் இருந்துள்ளார். மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் தனது இல்ல விழாவில் பங்கேற்க்கும் படி தொலைபேசி மூலம் அன்போடு அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார். வருவதாக சொல்லி இருந்தேன். நான் மாலை நேரத்தில் அவர் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கோயிலுக்கு சென்றுவிட்டனர்.
அண்ணாமலை பார்ட் 2 இவர்தான்.. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கடுமையாக விமர்சித்த துரை வைகோ.!!
மம்தா தான் காரணம்
இல.கணேசன் இல்ல விழாவிற்கு சென்று இருப்பேன். ஆனால் அந்த விழாவிற்கு மம்தா பானர்ஜி வந்ததால் அங்கே செல்லுக்கூடாது என்ற எண்ணமும் இருந்தது. மேற்குவங்கத்தில் பாஜகவினரை மம்தா பானர்ஜி மிகவும் மோசமாக நடத்தியுள்ளார். இல.கணேசன் கவர்னர் என்ற முறையில் அந்த மாநில முதல்வரை அழைத்துள்ளார். அதைப்பற்றி எனக்கு தனிப்பட்ட கருத்து இல்லை. இன்றோ,நாளையோ சென்று இல.கணேசன் வீட்டிற்கு சென்று ஆசிர்வாதம் வாங்குவேன். இல.கணேசனின் அண்ணன் என் மீது தனிப்பட்ட முறையில் பாசம் உடையவர். இருந்த போதும் மம்தா பானர்ஜி வந்த நேரத்தில் செல்ல கூடாது என்பது என் மனதில் உள்ள எண்ணம் என அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்