மரத்து மேல குரங்கு தாவுகிற மாதிரி சுத்தி சுத்தி வரீங்க. ஊர்ல நாய், போய், சாராயம் விற்கிறவன் எல்லாம் கேட்கிறதுக்கு நான் பதில் சொல்லணுமா? நகருங்க" என்று கோபமாக கூறிவிட்டுச் சென்றார். இவரது பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் அடிச்சுவடு தெரியாதவர்கள் கட்சியின் தலைவராக ஆக்கினால் இப்படித்தான் அநாகரிகமாக பேசுவார்கள் என அண்ணாமலைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதன் பின்னர் மதிய சாப்பிட்டிற்கு சென்ற அண்ணாமலை மீண்டும் வெளியே வந்தார். அப்போது, செய்தியாளர்களை அவரிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்து குறித்து கேட்டனர். இதனால் கடும் ஆவேசம் அடைந்த அண்ணாமலை, "மரத்து மேல குரங்கு தாவுகிற மாதிரி சுத்தி சுத்தி வரீங்க. ஊர்ல நாய், போய், சாராயம் விற்கிறவன் எல்லாம் கேட்கிறதுக்கு நான் பதில் சொல்லணுமா? நகருங்க" என்று கோபமாக கூறிவிட்டுச் சென்றார். இவரது பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- நாய்,பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் பதிலளிக்க முடியாது..! செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை
இது தொடர்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழ்நாட்டில் இருக்கும் பத்திரிகையாளர்களை, செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களை ஒருமையில் அழைப்பது, குரங்கு என்று சொல்வதெல்லாம் அநாகரித்தின் உச்சம். இவர்களுக்கு நாவடக்கம் தேவை.
பாஜகவினரின் இந்த போக்குக்கிற்கு வன்மையான கண்டனங்கள். தலைமையே இப்படி பேசினால், தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்? சில வாரங்களுக்கு முன் செய்தி சேகரிக்க சென்ற பத்தரிகையாளர்களை தகாத வார்த்தைகளில் பேசி, அவர்களை அடிப்பதற்கு துணிந்தவர்கள் தான் இந்த பா.ஜ.க.வினர்.
பாஜகவினரின் இந்த போக்குக்கிற்கு வன்மையான கண்டனங்கள். தலைமையே இப்படி பேசினால், தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்?
சில வாரங்களுக்கு முன் செய்தி சேகரிக்க சென்ற பத்தரிகையாளர்களை தகாத வார்த்தைகளில் பேசி, அவர்களை அடிப்பதற்கு துணிந்தவர்கள் தான் இந்த பா.ஜ.க.வினர். (2/3)
நாகரீகம் தவழும் தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் அடிச்சுவடு தெரியாதவர்கள் கட்சியின் தலைவராக ஆக்கினால் இப்படித்தான் அநாகரிகமாக பேசுவார்கள். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் எதை எப்படி செய்யவேண்டுமென்று என செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- ஊடகத்தினரை இழிவுபடுத்தும் போக்கு அநாகரிகமானது... அண்ணாமலையை விளாசிய டி.கே.எஸ்.இளங்கோவன்!!