
சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்ற நஞ்சாம்மாளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். கேரள மாநிலம் அட்டப்பாடி சேர்ந்தவர் நஞ்சம்மாள். 70 வயதான இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அட்டப்பாடி பழங்குடியின இளைஞர்கள் 18 ஆண்டுக்கு முன்பு உருவாக்கிய இசைக்குழுவில் கிராமிய பாடகராக இணைந்த இவர், பல நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். இந்த நிலையில் ஐயப்பனும் கோஷியும் என்ற மலையாள திரைப்படத்தில் அப்பட இயக்குநர் நஞ்சம்மாளை கிராமிய பாடல் ஒன்றை பாட வைத்தார். படம் வெளியாகி நஞ்சம்மாள் பாடிய பாடல் பிரபலமானது.
இதையும் படிங்க: 'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்கு தேசிய விருது வாங்கிய பழங்குடி பெண் நஞ்சியம்மா யார் தெரியுமா?
இதற்காக கடந்த ஆண்டு கேரள மாநில விருதைப் பெற்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்த திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் ஐயப்பனும் கோஷியும் படத்தில் பாடிய நஞ்சம்மாளுக்கு சிறந்த பின்னணி பாடகி விருது அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நஞ்சம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.
இதையும் படிங்க: 5 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த சூர்யாவின் சூரரைப் போற்று - யார் யாருக்கு என்ன விருது.. முழு விவரம்
மேலும் இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர், இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். காந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான நஞ்சம்மா பாட்டிக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது பெருமகிழ்ச்சி. ஒரு ரசிகனாக அவரை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்ததை எனது பாக்கியமாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். முன்னதாக நஞ்சம்மாளுக்கு விருது அறிவிக்கப்பட்ட உடன் அட்டப்பாடியில் உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இவ்விருதைப் பெற்ற நஞ்சம்மாளுக்கு அப்துல் கலாம் ஆதிவாசிகள் உண்டு உறைவிட பள்ளி சார்பாக பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்து வரவேற்பு அளித்தனர்.