3 மாசம் கழிச்சு செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியே இருக்காது…! அண்ணாமலை ‘ஷாக்’ தகவல்

By manimegalai aFirst Published Oct 24, 2021, 8:05 PM IST
Highlights

3 மாதம் கழித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் இருப்பார் என்றால் மதுவிலக்கு ஆயத்தீர்வை பற்றி பேச தொடங்குவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

3 மாதம் கழித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் இருப்பார் என்றால் மதுவிலக்கு ஆயத்தீர்வை பற்றி பேச தொடங்குவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தை போர் உச்சக்கட்டத்தையும் கடந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. மின்சார கொள்முதலில் கமிஷன் என்று அண்ணாமலை தொடர்ந்து அதிரடியான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

அதற்கு சளைக்காமல் பதிலளிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி எக்செல் ஷீட்டை திருடினார், 29.99 கோடியை சரியாக எழுத தெரியவில்லை, சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடுபவராக இருந்தால் ஆதாரத்தை காட்டட்டும் என்று கூறி இருந்தார்

இந் நிலையில் அண்ணாமலை கூறி இருப்பதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜியிடன் மன்னிப்பு கேட்க முடியாது. திருட்டை கண்டுபிடிக்க தான் எக்செல் பேப்பரை பகிர்ந்தேன். ஆதாரங்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு அமைச்சர்களாக வருவோம்.

3 மாதங்கள் கழித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் இருந்தால் மதுவிலக்கு ஆயத்தீர்வை பற்றி பேசுவோம். தொழில் தொடங்க சென்னை வருபவர்களை ஊழல்வாதிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

எங்களை ஒருபோதும் மிரட்ட முடியாது. எங்கள் மீது கையை வைத்தால் பாஜக என்னவென்று அவர்களுக்கு புரியும் என்று தெரிவித்துள்ளார்.

click me!