அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டம்.. முதல் கூட்டத்திலேயே ஆப்சென்ட் ஆன உதயநிதி ஸ்டாலின்.!

Published : Sep 28, 2021, 09:08 PM IST
அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டம்.. முதல் கூட்டத்திலேயே ஆப்சென்ட் ஆன உதயநிதி ஸ்டாலின்.!

சுருக்கம்

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதிஸ்டாலின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் கூட்டத்திலேயே அவர் பங்கேற்கவில்லை.   

அண்மையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.  பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு மாதம் சிண்டிகேட் குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம். பல்கலைக்கழகம் எடுக்கும் முக்கியமான முடிவுகளுக்கு இந்தக் குழு ஒப்புதல் அளிக்கும். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. உதயநிதி சிண்டிகேட் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், இக்கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முதல் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் பணிகள் காரணமாக அவர் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றிவரும் விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்பட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!