உள்ளாட்சி தேர்தல்.. 9 மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Published : Sep 28, 2021, 08:52 PM IST
உள்ளாட்சி தேர்தல்.. 9 மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

சுருக்கம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை:  ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர களப்பணியாற்றி வரும் நிலையில் தேர்தல் நாளன்று 9 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்த அறிவிப்பை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏனைய 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

CM Vijay-ஐ சந்திக்கும் மாணவர்கள்? : எப்போது? ஏன்? சூப்பர் அறிவிப்பு இதோ!
TN Politics: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! தவெகவில் ஐக்கியம்! அடுத்து என்ன நடக்கும்? பெரும் ட்விஸ்ட்!