ஹெச். ராஜா ஒரு பைத்தியக்காரர்…? சுத்தி வளைச்சு சூப்பர் பதில் சொன்ன சீமான்…

By manimegalai aFirst Published Sep 28, 2021, 7:32 PM IST
Highlights

பைத்தியக்காரர்களை பத்தி நான் பரிதாபப்படுவேன், ஆனால் பதில் சொல்ல மாட்டேன் என்று ஹெச். ராஜா பற்றிய கேள்விக்கு பதில் சொல்லி அசர வைத்துள்ளார் சீமான்.

வேலூர்: பைத்தியக்காரர்களை பத்தி நான் பரிதாப்படுவேன், ஆனால் பதில் சொல்ல மாட்டேன் என்று ஹெச். ராஜா பற்றிய கேள்விக்கு பதில் சொல்லி அசர வைத்துள்ளார் சீமான்.

பாஜகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எப்போதும் ஆகாது. அதிலும் ஹெச். ராஜாவுக்கும், சீமானுக்கு ஆகவே ஆகாது. பல மேடைகளில் ஹெச். ராஜா பற்றிய கேள்விகளுக்கு அரசியல் ரீதியாக அதிரடியாக பதில் கூறுவார் சீமான்.

இப்போதும் அப்படித்தான்… ஹெச். ராஜா பற்றிய கேள்விக்கு ஒன்று பதிலளித்து பத்திரிகையாளர்களை கலகலப்பாக்கி இருக்கிறார். வேலூரில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கிய அவர் செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டியளித்தார்.

அவர் தமது பேட்டியில் கூறி இருப்பதாவது: மேட் இன் தமிழ்நாடு என்று திமுக அரசு எதை தயாரிக்க உள்ளனர்? ஒரு குண்டூசியையாவது தயாரித்து இருக்கின்றனரா? இங்கு தயாரிக்கப்படுவது எல்லாம் குவார்ட்டர், பீர் போன்றவை தான்.

பிரதமர் மோடி அமெரிக்காவை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அதனால் தான் அங்கு சென்றுவிட்டு வந்திருக்கிறார். பல நாடுகளை சுற்றிய பிரதமரால் பயன் இருக்கிறதா? வெள்ளையர்களை துரத்திவிட்டு, விமானத்தில் வருபவர்களை வர்த்தகம் செய்ய வாங்க என்று அழைக்கின்றனர். இப்படித்தான் இருக்கிறது இந்தியாவின் பொருளாதார நிலைமை என்று கூறினார்.

அப்போது சீமானிடம் உங்கள் தாயார் மலையாளி என்று பாஜக முக்கிய தலைவர் ஹெ. ராஜா கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமானின் பதில் தான் சூப்பர். நான எப்போதுமே பைத்தியக்காரர்கள் மீது பரிதாப்படுவேன், அவர்களுக்காக பதில் சொல்ல விரும்பமாட்டேன் என்று கூற, சிரிப்பலை அடங்க சில நிமிடங்கள் ஆனது.

click me!