அண்ணா பல்கலைக்கு புதிய துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம்.. ஆளுநர் அதிரடி உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Aug 10, 2021, 2:10 PM IST
Highlights

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமித்து ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக வேல்ராஜ் நியமிக்கப்ப்பட்டுள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமித்து ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக வேல்ராஜ் நியமிக்கப்ப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் எரிசக்தி இயக்குனராக பணியாற்றி வந்தவர் ஆவார் வேல்ராஜ். இவர் இப்பல்கலை கழகத்தின் துணை வேந்தராக மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் எரிசக்தி துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார், மேலும்,  33 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்து அனுபவம் உள்ளவர் ஆவார். இவர் இதுவரை 193 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பேராசிரியர் வேல்ராஜ்
துறைத்தலைவர் துணை இயக்குனர் உட்பட 14 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் கொண்டவராவார். அவர் 53 தலைப்புகளில் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரைகளில் 23 கட்டுரைகள் சர்வதேச கட்டுரைகள் ஆகும். 

மெத்தப்படித்த, நிறைந்த அனுபவம் பெற்ற இவர், இதுவரை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு கல்விச்சுற்றுலா மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரையே அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்க வேண்டுமென பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றும் அனுபவம் நிறைந்த பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 
 

click me!