அந்த நாய் வேலையும் பார்க்கல... காசும் செலவழிக்கல... திமுகவினருக்கு தொல்லை கண்ணன் ஆக மாறிய நெல்லை கண்ணன்..!

Published : Aug 10, 2021, 01:55 PM IST
அந்த நாய் வேலையும் பார்க்கல... காசும் செலவழிக்கல... திமுகவினருக்கு தொல்லை கண்ணன் ஆக மாறிய நெல்லை கண்ணன்..!

சுருக்கம்

நமக்கு என்ன அவமானம், நம்ம தொகுதியில தாமரை மலர்வது நமக்கு அவமானமாக இருக்கு. எவ்வளவு பெரிய கேவலம் நமக்கு.

கடந்த ஆண்டு, திருநெல்வேலி, மேலப்பாளையத்தில் நடந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான நெல்லை கண்ணன், மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் அவர் ஆக்ரோஷமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக கடந்த ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி நெல்லை கண்ணன் கைதுசெய்யப்பட்டார். அவரது கைதுக்கு அரசியல் கட்சியினர் பலரும் அப்போது எதிர்ப்பு தெரிவித்தார்கள். சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் திமுகவினரை பற்றி நெல்லை கண்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2016ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக சார்பில் எதிர்த்து நின்ற நைனார் நாகேந்திரனை தோற்கடித்தவர் ஏ.எல்.எஸ்.லட்சுமனன். இந்தமுறையும் திமுக லட்சுமனனுக்கு சீட் கொடுத்தது. ஆனால் பாஜக சார்பில் போட்டியிட்ட நைனார் நாகேந்திரன் வெற்றிபெற்றார். 

இந்நிலையில், திருநெல்வேலியில், மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் சங்கரய்யாவின் நுாற்றாண்டு விழா நடந்தது.

தி.மு.க., மாவட்டச் செயலர் ஆவுடையப்பன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் நெல்லை கண்ணன் பேசியது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. அதில், ‘’திருநெல்வேலியில் தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனுக்கு வாய்ப்பு கொடுத்தாங்க.  ஆனால் அவன் தேர்தல் வேலையும் செய்யல. காசும் செலவழிக்கல. அந்த நாயிடம் சொல்லிப்பார்த்தேன். அவன் கேட்கல. அவன் எங்கிட்ட சொன்னான், பிஜேபிகாரன் உன்னை ஜெயிலுக்கு அனுப்பனும்னு சொல்றாங்க மாமானு என்கிட்ட சொல்லுறான். அப்ப அவன் எவ்வளவு தப்பான பையன். நான் உடனே  ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பேசினேன். ‘’யோவ் பிஜேபிக்கு சப்போர்ட்டா பேசுறான்யானு சொன்னேன். கட்சியில் இருந்து, 4 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர்.

ஆனால், செலவழிக்கவில்லை. கூட்டணிக் கட்சிக்கும் பணம் தரவில்லை. மனிதநேய மக்கள் கட்சி ரசூல் வீட்டுக்கு வந்தான். சரி நைனாருக்கு ஒரு வாய்ப்பு இருக்கு விடுங்கடானு சொன்னேன். திருநெல்வேலியில் தாமரை மலர்ந்து விட்டது. நமக்கு என்ன அவமானம், நம்ம தொகுதியில தாமரை மலர்வது நமக்கு அவமானமாக இருக்கு. எவ்வளவு பெரிய கேவலம் நமக்கு. நானும் திருநெல்வேலியில் மூன்று முறை தேர்தலில் நின்று பார்த்து விட்டேன். எனக்கு ஓட்டு போட மாட்டார்கள். எவனுக்காவது அந்த நாய்கள் ஓட்டு போடுவர். முதல்வருக்கு எதிராக, தி.மு.க.,வில் ஒரு கோஷ்டியினர் கோபத்தில் உள்ளனர். ஒரு அமைச்சர் என்னிடம், 'தலைவர் ரொம்ப சீரியஸ் ஆக நடவடிக்கை எடுக்கிறார்' என்றார். இரண்டு அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ளார்’’என அவர்
நாகரிகம் அல்லது அறிவாளி என்ற பெயரில் அநாகரிகமாக உளறிக் கொட்டி இருக்கிறார். 

இத்தனைக்கும் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் என்பவர் இவர் சார்ந்த அதே பிள்ளைமார் வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இதில், லட்சுமணன் பற்றி பேசியது குறித்து, திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகி உமா மகேஸ்வரன், தொழில்நுட்ப அணி நிர்வாகி பலராமன் ஆகியோர், போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணனிடம் புகார் அளித்தனர். நெல்லை கண்ணன் பேச்சு குறித்து உரிய விசாரணை நடத்தி, அவர்மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க வழக்கறிஞர்கள் அளித்துள்ள இந்த மனு காரணமாக நெல்லை கண்ணன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருகிறார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!