ராகுலும் நிபா வைரஸும் ஒண்ணு – டிவிட்டிய அனில் விஜ்

Asianet News Tamil  
Published : May 30, 2018, 12:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
ராகுலும் நிபா வைரஸும் ஒண்ணு – டிவிட்டிய அனில் விஜ்

சுருக்கம்

anil vij twitter

ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டப்பேரவையில் அனில் விஜ் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார்.  எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் இவர், தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'ராகுலுக்கும், நிபா வைரஸுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ராகுலோடு ஏதாவது அரசியல் கட்சி தொடர்பு வைத்துக் கொண்டால், அது உடனடியாக அழிந்துபோய்விடும்' என்று பதிவிட்டுள்ளார்.

அனில் விஜ் காந்தி தன் உறவினர்களுக்கு பரிமாறிய தட்டில்தான் நாய்க்கும் சாப்பாடு வைத்தார் என சர்ச்சைக்குரிய கருத்தை
முதன் முதலாக தெரிவித்திருந்தார்.

அதன்பின் சமீபத்தில் பகத் சிங் மற்றும் லாலா லஜ்பத் ராய் ஆகியோர்தான் இந்தியாவின் விடுதலைக்கு மிகப்பெரிய தியாகங்களை செய்துள்ளனர். நேரு காந்தி போன்றவர்கள் தங்கள் வாழ்வில் குச்சியை தாங்கியதை விட வேறெதையும் செய்யவில்லை எனக் கூறினார்

மேற்கு வங்க முதலமைச்சர் ம்ம்தா பானர்ஜியை இந்தியராக பிறந்த்தில் பெருமைப்படவில்லை என்றால் கடலில் குதித்துவிட வேண்டுமென கூறினார்.

தற்போது அனில் விஜ்-ன் இந்த பதிவு காங்கிரஸார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தேமுதிக யாருடன் கூட்டணி? 'முடிவெடுத்து விட்டேன்'.. ஆனால்?? சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா! முக்கிய அறிவிப்பு!
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!