தமிழகத்துக்கு பாஜக பச்சை துரோகம் செய்கிறது! மாதிரி சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

Asianet News Tamil  
Published : May 30, 2018, 11:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
தமிழகத்துக்கு பாஜக பச்சை துரோகம் செய்கிறது! மாதிரி சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

சுருக்கம்

The BJP makes betrayal - M.K.Stalin speech at Sample Assembly

காவிரி ஆணையம் அமைப்பது தாமதமாகி வரும் நிலையில், தமிழகத்துக்கு பாஜக செய்யும் பச்சை துரோகம் என்று மாதிரி சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த திமுகவின் மாதிரி சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு
தொடங்கியது.

மாதிரி சட்டப்பேரவையின் சபாநாயகராக சக்கரபாணி உள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், இரட்டை இலை சின்னத்தில்
வெற்றிபெற்ற கருணாஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

மாதிரி சட்டசபை துவக்கத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில்  உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 கோடி வழங்கும் துர்மானத்தை மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வந்தார்.

இதன் பின்னர் மு.க.ஸ்டாலின், காவிரி ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றத்தால் ஒப்புதல் பெற்றிருந்த நிலையில், ஆணையம் அமைப்பது தாமதமாகி வருகிறது. இது பாஜக செய்யும் பச்சை துரோகம் என்றார்.

உச்சநீதிமன்றம், ஜூன் 1 ஆம் தேதிக்குள் ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், மத்திய அரசு இதற்கு ஒப்புதல் தெரிவிக்காமல் இருப்பது, மத்திய அரசு தமிழகத்தை தனித்தீவாக கருதுவதாக உள்ளது என்றார். சொந்த அரசியல் ஆதாயத்துக்காக மத்திய அரசு செயல்படுவதாகவும், அதற்கு துணைபோகும் அதிமுக அரசையும் திமுக கண்டிக்கிறது என்றார்.

மத்திய அரசின் இந்த வஞ்ச போக்கைக் கண்டித்து, உடனனடியாக காவிரி ஆணையம் அமைக்க வேண்டும். டெல்டா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று மாதிரி சட்டமன்ற பேரவை வலியுறுத்துவதாகவும் மாதிரி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம், மாதிரி சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை கருணாஸ், அபுபக்கர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் இதனை வழிமொழிந்தனர்.

PREV
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி ஊழல்... உத்தரவு பிறப்பித்த அரசு... தலைகீழாக மாறும் கே.என்.நேருவின் அரசியல் களம்..?!
இதுமட்டும் நடந்தால் ஜனநாயகன் நாளைக்கே ரிலீஸ்தான்.. உடைத்து பேசிய சென்சார் போர்டு மெம்பர்..!