அமமுக - ன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காராமா போச்சா..! தேர்தல் பறக்கும் படையினரை காண்டாக்கும் ஆண்டிபட்டி தங்கம்

By Asianet TamilFirst Published May 14, 2019, 11:42 AM IST
Highlights

 இது நடுநிலைமை எங்க இருக்கு. என்னை போலதான் திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய அமைச்சர்களும் ஹோட்டல்ல ரூம் போட்டு தங்கிருக்காங்க அங்கயெல்லாம் போயி சோதனை நடத்த வேண்டிதான என ஆண்டிபட்டி தங்கம் தாறுமாறாய் கொதித்துள்ளார்.

இது நடுநிலைமை எங்க இருக்கு. என்னை போலதான் திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய அமைச்சர்களும் ஹோட்டல்ல ரூம் போட்டு தங்கிருக்காங்க அங்கயெல்லாம் போயி சோதனை நடத்த வேண்டிதான என ஆண்டிபட்டி தங்கம் தாறுமாறாய் கொதித்துள்ளார்.

தேர்தல் திருவிழாவால் களைகட்டி இருக்கிறது திருப்பரங்குன்றம். இத்தொகுதியில் வாக்கு வேட்டைகாக ஒவ்வொரு கட்சியினர் அக்னி வெயில் என்றும் பாராமல் வரிந்து கட்டி களம் இறங்கி இருக்கிறார். வாக்கு பதிவானது இத்தொகுதியில் வரும் 19-ம் தேதி நடைபெற இருப்பதால்  இத்தொகுதிகளில் பண மூட்டைகளை அவிழ்க்க தயாராகிவிட்டார்கள் அரசியல் கட்சியினர். 

இத்தொகுதியில் அ.தி.மு.க, தி.மு.க,அ.ம.மு.க என மூன்று கட்சிகளுமே பணத்தே வாக்காளர்களிடம் கொடுத்து ஜெயித்துவிட வேண்டும் என முனைப்போடு இருக்கிறார்கள். ஆனால் தேர்தல் பறக்கும் படையினர் சில இடங்களில் வாக்காளர்களுக்கு கொடுக்கும்  பணத்தை பறிமுதல் செய்கிறார்கள். 

இந்நிலையில் திருப்பரங்குன்றம் அ.ம.மு.க வேட்பாளாரான மகேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்யும் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தங்கியிருக்கும் அறையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம்  வைத்திருக்கிறார் என்ற தகவல் தேர்தல் பறக்கும் படையினருக்கு போனது. 

இந்த தகவலை நம்பி மதுரை பழங்காநத்தம் அருகே தங்கதமிழ்செல்வன் தங்கியிருக்கும் அறையில் சோதனை நடத்தினர்.ஆனால் சோதனை முடிவில் எதுவும் சிக்கவில்லை தமிழ்செல்வனும் அந்த அறையில் இல்லை. இதை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன்,'' நான் இல்லாத நேரத்துல என் அறையில பறக்கும் படையினர் சோதனை நடத்திருக்காங்க. இது நடுநிலைமை எங்க இருக்கு. என்னை போலதான் திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய அமைச்சர்களும் ஹோட்டல்ல ரூம் போட்டு தங்கிருக்காங்க அங்கயெல்லாம் போயி சோதனை நடத்த வேண்டிதான. 

அ.ம.மு.க மட்டும்தான் பணம் வச்சுருக்கும்னு நினைக்கிறிங்களா?. உண்மையான அ.தி.மு.க எங்கள இளக்காரமா பாக்குறிங்களா" என தேர்தல் பறக்கும் படையினரை பொரிந்து தள்ளினார்.

click me!