வேலூரை தொடர்ந்து ஆண்டிப்பட்டியிலும் இடைத்தேர்தல் ரத்தாகிறது..?

Published : Apr 17, 2019, 03:48 PM IST
வேலூரை தொடர்ந்து ஆண்டிப்பட்டியிலும் இடைத்தேர்தல் ரத்தாகிறது..?

சுருக்கம்

வேலூரில் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அந்த தொகுதி மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டதைப் போன்று ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூரில் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அந்த தொகுதி மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டதைப் போன்று ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவா்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ரூ.11 கோடிக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடா்ந்து வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் வேலூர் மக்களவைத் தோ்தலும் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில் ஆண்டிபட்டியில் அமமுக பிரமுகருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனையடுத்து சோதனை நடத்த சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த ரூ.1.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். மீதி பணத்தை தள்ளுமுள்ளுவின் போது அமமுகவினர் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து ஆண்டிப்பட்டியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து இன்று பிற்பகல் தோ்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறையினர் 
அறிக்கை அளிக்க உள்ளனர். அறிக்கையின் அடிப்படையில் ஆண்டிப்பட்டி இடைத்தோ்தல் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஆண்டிபட்டி தொகுதியில் திமுக சார்பில் மகாராஜன், அதிமுக சார்பில் லோகிராஜன், அமமுக சார்பில் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!