உங்களுக்கு வேணும்னா இது பெரிய விஷயமாக இருக்கலாம்... எனக்கு ஒண்ணும் இல்ல... தேர்தல் ரத்து குறித்து துரைமுருகன் தெனாவெட்டு பேச்சு!

By Thiraviaraj RMFirst Published Apr 17, 2019, 3:34 PM IST
Highlights

நூறு வருஷமா இருக்கிற திமுக கழகத்தின் பொருளாளராக இருக்கிற நான் இந்த தேர்தலை ரத்து செய்ததெற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன் என தெனாவெட்டாக துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

நூறு வருஷமா இருக்கிற திமுக கழகத்தின் பொருளாளராக இருக்கிற நான் இந்த தேர்தலை ரத்து செய்ததெற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன் என தெனாவெட்டாக துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

வேலூரில் உள்ள தனது வீட்டில் தேர்தல் ரத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். ‘’தேர்தல் ரத்து குறித்து நானாக எந்த முடிவையும் எடுத்து விட முடியாது. கட்சி தலைமை இருக்கிறது. எனவே கட்சி நிர்வாகிகளுடனும், தலைவர் மு.க.ஸ்டாலினுடனும் கலந்தாலோசித்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். நாளை வாக்களித்த பிறகு சென்னை சென்று கட்சி தலைமையுடன் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும்.


 
உங்களுக்கு வேண்டுமென்றால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது பெரிய விஷயமாக இருக்கலாம். நூறு வருஷமா இருக்கிற திமுக கழகத்தின் பொருளாளராக இருக்கிற நான் இதுபோன்று தேர்தலை ரத்து செய்ததற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். என்னக்கொன்றும் பெரிய விஷயமில்லை’’ என தெனாவெட்டாக பதில் அளித்தார்.  

முன்னதாக பேசிய அவர், தேர்தல் ஆணையம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆனால் அ.தி.மு.க.வில் பணம் கொடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை என கருதுகிறேன். நடைபெறும் 38 பாராளுமன்றத்திலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.நாங்கள் வெற்றி பெற்றால் மோடி அரசும் போய்விடும். எடப்பாடி அரசும் போய்விடும். அ.தி.மு.க. மீதான குற்றசாட்டுகள் குறித்து மற்ற நடவடிக்கைகளை பிறகு பார்த்து கொள்ளலாம். வழக்கறிஞர்களிடம் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அவர் தெரிவித்தார். 

click me!