வன்னியா்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி குடும்பத்துடன் கடிதம்!!

Published : Apr 17, 2023, 07:19 PM IST
வன்னியா்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி குடும்பத்துடன் கடிதம்!!

சுருக்கம்

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வேண்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், வீ.பாரதிதாசனுக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்துடன், கடிதம் அனுப்பியுள்ளார்.

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வேண்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், வீ.பாரதிதாசனுக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்துடன், கடிதம் அனுப்பியுள்ளார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியது. சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடுத்த வழக்கில் அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று உயா்நீதிமன்றம் அறிவித்தாலும், வன்னியா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதையும் படிங்க: கர்நாடக தேர்தல்: பாஜக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உரிய தரவுகளைத் திரட்டி வன்னியா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் அரசுக்கு நீதிமன்றம் வழிகாட்டியது. இந்தத் தீா்ப்பு வெளியானதிலிருந்து 3 மாதங்களுக்குள் உரிய தரவுகளைத் திரட்டி, கடந்த கல்வியாண்டிலேயே வன்னியா்களுக்கு உள் இடஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள் இடஒதுக்கீடு வழங்கப்படாததால் உள்ஒதுக்கீடு வழங்குவதற்காக உரிய தரவுகளைத் திரட்டும் தமிழக பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கான காலக்கெடு 6 மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணாமலையை விட்டுடாதிங்க... திமுகவிடம் வலியுறுத்திய காயத்ரி ரகுராம்!!

இந்த நிலையில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வேண்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், நீதியரசர் வீ.பாரதிதாசனுக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்துடன், தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தபால் நிலையத்தில் கடிதங்களை அனுப்பியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!