பதவி கிடைக்கும் வரை ஒரு நிலைப்பாடு .. கிடைச்சப்புறம் ஒரு நிலைப்பாடா ? கொந்தளித்த இபிஎஸ் !!

By Selvanayagam PFirst Published Jan 6, 2020, 11:06 PM IST
Highlights

தேர்தலில் கூட்டணியே வேண்டாம் என முடிவெடுத்த பாமக, கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது தவறு என்றும் தற்போது ஏன் கூட்டணி வைத்துக் கொண்டோம்?  என்று அதிமுகவினர் யோசிக்க வைத்து விட்டனர் என்ற அனபுமணியின் பேச்சு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சூடாக்கியுள்ளது.

கடந்த மக்களைவைத் தேர்தலில் அதிமுக பாமகவுடன்தான் கூட்டணியில் முதல் கையெழுத்துப் போட்டு தொடங்கி வைத்தது. அதன் பின்னர் தான் பாஜக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி போட்டது. ஆனால் அந்தத் தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

பாமகவின் பெல்ட் எனப்படும் வட மாவட்டங்களில் அக்கட்சி படு தோல்வி அடைந்தது. அன்புமணி ராமதாஸ் கூட புதுமுக திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அதே நேரத்தில் கூட்டணி ஒப்பந்தப்படி அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக வழங்கியது.

இந்நிலையில் கடந்த  1ஆம் தேதி பாமகவின் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆளும் அதிமுகவை வெளுத்து வாங்கிவிட்டார். இடைத் தேர்தலில் பாமக வாக்களிக்கவில்லை என்றால் இந்த அரசு இருந்திருக்காது என கூறி அதிரவைத்தார்.

அண்மையில் நடைபெற்ற ஊரக் உள்ளாட்சித் தேர்தலில் பாமகவை அதிமுக கண்டுகொள்ளவில்லை என்பது தான் அன்புமணியின் கோபம். அந்த தேர்தலில் பாமகவை அதிமுக ஏமாற்றிவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அன்புமணி, தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. கூட்டணியே வேண்டாம் என்கிற கொள்கையில் இருந்தோம். ஆனால், அந்த கொள்கையை மாற்றி கூட்டணி என்கிற நிலைப்பாட்டை எடுத்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம். ஆனா, ஏன் கூட்டணிக்குள் போனோம்னு யோசிக்க வைத்துவிட்டார்கள். ஒரு சீட்டுக்கு அரை சீட்டுக்கு கால் சீட்டுக்குன்னு கெஞ்ச வைத்து விட்டார்கள் என்று கடும்  கோபம் கொப்பளிக்க பேசினார்.

தைலாபுரத்தில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் என்ன? என்ன ? பேசப்பட்டது என்பது குறித்து உளவுத்துறை எடப்பாடிக்கு .தகவல் அனுப்பியது. அன்புமணியின் பேச்சைக் கேட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் என கூறப்படுகிறது.

அப்போது சக அமைச்சர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  "அன்புமணிக்கு பதவி கிடைக்கிற வரையில் ஒரு நிலைப்பாடும், கிடைத்ததும் வேறு ஒரு நிலைப்பாடும் எடுப்பதே பாமகவின் பாலிசி….. கூட்டணியில் இருப்பதும் விலகுவதும் அவர்கள் விருப்பம்' என தூக்கி எறிந்து பேசியிருக்கிறார். அரசியல் வட்டாரத்தில் முதலமைச்சரின் ரியாக்சன் தான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.

click me!