டெல்லி சட்டப் பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிப்பு !! தேர்தல் ஆணையம் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jan 6, 2020, 8:51 PM IST
Highlights

டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம்  வரும் பிப்ரவரி 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அந்த மாநிலத்துக்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்ற தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  , டெல்லி சட்ட சபையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. 2020, ஜனவரி 6ம் தேதி நிலவரப்படி டெல்லியில் ஒரு கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 வாக்காளர்கள் உள்ளனர்.

டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தலைமை செயலாளர், காவல்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என சுனில் அரோரா தெரிவித்தார்.

தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதில் ஆணையம் உறுதியாக உள்ளது என்றும்,  வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். மூத்த குடிமக்களுக்கு வாகன வசதி செய்து தரப்படும் என்றும் அவர் தெரவித்தார்..

தேர்தலுக்காக 13,750 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 90 ஆயிரம் அதிகாரிகள் பயன்படுத்தப்பட உள்ளனர் என கூறிய சுனில், .டெல்லியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்  உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வேட்பு மனுதாக்கல் வரும் 14ம் தேதி தொடங்கும். பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும். அன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும் என்றும் தலைமைத்  தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  தெரிவித்தார்.

click me!