"வட இந்திய பெண்கள் பலர் என்னை லவ் பண்ணாங்க..!!" - அன்புமணியின் கிளுகிளு பேச்சு

Asianet News Tamil  
Published : Mar 08, 2017, 03:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
"வட இந்திய பெண்கள் பலர் என்னை லவ் பண்ணாங்க..!!" - அன்புமணியின் கிளுகிளு பேச்சு

சுருக்கம்

Adyar Chennai Rotary clubs participated and spoke on behalf of the former Federal Minister

சென்னை அடையாரில் ரோட்டரி சங்கங்கள் சார்பாக நடைபெற்ற முன்னால் மத்திய அமைச்சர் அன்புமணி கலந்து கொண்டு பேசினார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு என்ற தலைப்பில் அன்புமணி பேசினார்.

சரளமான ஆங்கிலத்தில் தமிழகத்தின் தற்போதைய நிலை மற்றும் பிரச்சனைகள் குறித்து சிறு குறிப்பு கூட கையில் வைத்து கொள்ளாமல் வெளுத்து வாங்கினார்.

அன்புமணியின் பேச்சை கேட்ட அங்கிருந்த உயர்வகுப்பு பிரிவை சேர்ந்த  ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

சுகாதார துறையில் தான் அமைச்சராக இருந்தபோது சாதித்த அம்சங்கள் குறித்தும் தற்போது அத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் குறித்தும் புட்டு புட்டு வைத்தார் அன்புமணி.

குறிப்பாக பள்ளி மாணவ மாணவியருக்கு ஒரே ஸ்மார்ட் கார்ட் மூலம் கண் முதல் கால் வரை என்னென்ன பிரச்னைகள்  இருக்கிறது என்பதை கொண்டு வந்து விடலாம், இதற்கு பெரிய செலவும் பிடிக்காது. இதனால் சுகாதாரமான ஆரோகியமான சமூகத்தை உருவாக்க முடியும்.

தமிழகத்தின் கல்வி, விவசாயம், சுகாதாரம், தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் அணைத்து வசதிகளும் இருந்தாலும் அவை சரிவர பயன்படுத்த படுவதில்லை என குற்றம் சாட்டினார்.


விவசாயத்தை பொறுத்தவரை பொய்த்து போன மழை சரியான திட்டமிடல் இல்லாததால் மிகவும் பின் தங்கி போயுள்ளோம் என கூறினார்.

தனது சுவாரஸ்யமான பேச்சுக்கிடையே மேலும் சுவாரஸ்யம் கூட்டும் வகையில் தான் அமைச்சராக இருக்கும்போது செய்த நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பல வட இந்திய பெண்கள் தன்னிடம் லவ் ப்ரொபோஸ் பண்ணியதாக அன்புமணி சிரித்துக்கொண்டே கூறினார்.

அதை தன் மனைவியிடம் கூறி சிரித்ததாக அன்புமணி கூறினார்.

அப்போது அங்கிருந்த அனைவரும் வாய் விட்டு சிறிது கை தட்டினர்.

PREV
click me!

Recommended Stories

Vijay Jana Nayagan: தமிழ் சினிமா ஹிஸ்ட்ரில இது 2-வது முறை! எம்.ஜி.ஆருக்கு அப்புறம் தளபதி விஜய் செய்த அரிய சாதனை!
TASMAC: மீண்டும் பாட்டிலுக்கு 10 ரூபாய்.?! வசூல் வேட்டையை தடுப்பது யார்? புலம்பி தீர்க்கும் குடிமகன்கள்.!