கூட்டணி யார் கூடன்னு அப்பா தான் சொல்லுவாரு... அதுதான் ஜெயிக்கும்!! காதுகுத்து வீட்டில் சொன்ன அன்புமணி

Published : Jan 25, 2019, 02:09 PM IST
கூட்டணி யார் கூடன்னு அப்பா தான் சொல்லுவாரு... அதுதான் ஜெயிக்கும்!!  காதுகுத்து வீட்டில் சொன்ன அன்புமணி

சுருக்கம்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார். அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என பென்னாகரத்தில் நடந்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியின் இல்ல விழாவில்  கலந்துகொண்ட  அன்புமணி  கலந்து கொண்டார்.

பாமக தலைவர் ஜி.கே.மணி பேரக்குழந்தை காதணி விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி பேசியதாவது;  தர்மபுரி மாவட்டம் முழுவதும் வரலாறு காணாத வகையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சமாளிக்க அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பா.ம.க.தான் மிக முக்கிய காரணமாக இருந்தது. அதேபோன்று இந்த திட்டத்தையும் நிறைவேற்ற பாமக தொடர்ந்து போராடும். தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை, நெக்குந்தியில் ராணுவ தளவாட தொழிற்சாலை, மொரப்பூர் - தர்மபுரி ரெயில்பாதை இணைப்பு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற அந்தந்த துறைகளை சேர்ந்த அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். 

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. அண்மையில் கோவையில் நடந்த பா.ம.க. பொதுக்குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம்  ராமதாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார். அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என பேசினார்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!