மு.க. ஸ்டாலினுக்கு எதுவும் தெரியவில்லை... திமுகவை காய்ச்சி எடுத்த அன்புமணி ராமதாஸ்!

By Asianet TamilFirst Published Feb 17, 2020, 10:30 PM IST
Highlights

மக்களைத் தூண்டிவிட்டு இரண்டு கோடி கையெழுத்து என்று மக்களை ஏமாற்றுகிறார்.  விவசாயியான முதல்வர் எடப்பாடி விவசாயிகளுடைய கஷ்டங்களை புரிந்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தது மகிழ்ச்சி. முதல்வருக்கு பாமக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதுவும் தெரியவில்லை. அதுதான் ஒரே பிரச்னை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
பாமக நிறுவனர் ராமதாஸின் 80-வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை அம்பத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். “பாமகவின் ஆசை, லட்சியம் எல்லாம் தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என்பதுதான். இந்தியாவுக்கே சுகாதாரம் கொடுத்த பாமகவால், தமிழகத்துக்கு சுகாதாரம் கொடுக்க தெரியாதா? நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம். மக்களுக்கு நன்மை செய்தால் அரசை பாராட்டுவோம். எதிரான திட்டங்களைக் கொண்டு வந்தால் போராடுவதோடு எதிர்த்துக் குரல் கொடுப்போம். அது எந்தக் கூட்டணியில் இருந்தாலும் சரி.” என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “திமுக தலைவர் ஸ்டாலின் பொது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் செய்ய நினைக்கிறார். அவருக்கு வேறு எதுவும் தெரியவில்லை. அதுதான் ஒரே பிரச்சனை. மக்களைத் தூண்டிவிட்டு இரண்டு கோடி கையெழுத்து என்று மக்களை ஏமாற்றுகிறார்.  விவசாயியான முதல்வர் எடப்பாடி விவசாயிகளுடைய கஷ்டங்களை புரிந்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தது மகிழ்ச்சி. முதல்வருக்கு பாமக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

click me!