பீதியை கிளப்புறாங்க.. யாரும் பயப்படாதீங்க..! கொரோனாவிற்கு தீர்வு கூறும் மருத்துவர் அன்புமணி..!

By Manikandan S R SFirst Published Mar 5, 2020, 11:30 AM IST
Highlights

கரோனா வைரஸ் தாக்குதல் குறித்த மிகைப்படுத்தப்பட்ட தகவல்களாலும், வதந்திகளாலும் தமிழக மக்களிடம் ஒரு வித அச்சம் நிலவுகிறது. கரோனா வைரசை தவிர்த்தல் மற்றும் நோய்த் தொற்றினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பொதுவான மருத்துவ அறிவுரைகள் ஆகியவற்றை வழங்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அச்சத்தை போக்க வேண்டும்.

உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன. நாடு முழுவதும் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தநிலையில் கொரோனா குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை  28-ஆக உயர்ந்திருக்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதைத்  தொடர்ந்து மக்களிடம் ஒரு விதமான அச்சம் ஏற்பட்டிருக்கிறது. கவனத்துடனும், எச்சரிக்கையுடனும்  இருந்தால் கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்கலாம் என்பதால், இது குறித்த கவலை தேவையில்லை.

சீனாவிலும், பிற நாடுகளிலும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த 3,190 பேருமே ஏற்கனவே உடல் வலிமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லாமல் இருந்தவர்கள் தான். எனவே, கரோனா பாதிப்பை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இந்த நோய் மனிதர்கள் மூலம் பரவுகிறது என்பதால் சுற்றுலாத் தலங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்காது என்பதால், பிறந்தநாள் விழா போன்ற கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும். புதிய மனிதர்களுடன் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் உணவுக்கு முன்பும், பிறகும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுவதை அனைவரும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

நாடகக்காதல் ஆதரவாளருக்கு திரௌபதி சாதிவெறியாக தான் தெரியும்..! வீரமணியை வெளுத்து வாங்கிய ராமதாஸ்..!

கரோனா வைரஸ் தாக்குதல் குறித்த மிகைப்படுத்தப்பட்ட தகவல்களாலும், வதந்திகளாலும் தமிழக மக்களிடம் ஒரு வித அச்சம் நிலவுகிறது. கரோனா வைரசை தவிர்த்தல் மற்றும் நோய்த் தொற்றினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பொதுவான மருத்துவ அறிவுரைகள் ஆகியவற்றை வழங்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அச்சத்தை போக்க வேண்டும். 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிகளுக்காக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து பள்ளிகளும் முழுமையாக கடைபிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். 

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

இந்து முன்னணி பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்..! கோவையில் பரபரப்பு..!

click me!