கூட்டணியை விட்டு வெளியேறுவோம்..! ஓபிஎஸ் – இபிஎஸ்சுக்கு தேமுதிக இறுதிக் கெடு..!

By Selva KathirFirst Published Mar 5, 2020, 10:48 AM IST
Highlights

2006ம் ஆண்டு முதல் எம்பி ஆக வேண்டும் என்கிற கனவில் எல்.கே.சுதீஷ் மிதந்து வரும் நிலையில் அது தற்போது வரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. தனது தம்பியை எப்படியேனும் எம்பி ஆக்கி அழகு பார்த்திட அக்கா பிரேமலதா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் கையை மீறிப் போயுள்ளது. தேமுதிகவிற்கு சட்டப்பேரவையில் 28 எம்எல்ஏக்கள் இருந்த போது நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் கூட அந்த கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. தேமுதிக எம்எல்ஏக்களை பேரம் பேசி சுதீஷின் எம்பி கனவிற்கு அப்போதே ஆப்பு வைத்தவர் ஜெயலலிதா. அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் கைக்கு எட்டிய எம்பி பதவி கடைசி வரை சுதீஷூக்கு வாய்க்கு எட்டவே இல்லை.

மாநிலங்களவை தேர்தலில் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி தேமுதிகவிற்கு ஒரு இடம் ஒதுக்கவில்லை என்றால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்று தேமுதிக முடிவெடுத்துள்ளதாக பரபர தகவல் வெளியாகி வருகிறது.

2006ம் ஆண்டு முதல் எம்பி ஆக வேண்டும் என்கிற கனவில் எல்.கே.சுதீஷ் மிதந்து வரும் நிலையில் அது தற்போது வரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. தனது தம்பியை எப்படியேனும் எம்பி ஆக்கி அழகு பார்த்திட அக்கா பிரேமலதா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் கையை மீறிப் போயுள்ளது. தேமுதிகவிற்கு சட்டப்பேரவையில் 28 எம்எல்ஏக்கள் இருந்த போது நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் கூட அந்த கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. தேமுதிக எம்எல்ஏக்களை பேரம் பேசி சுதீஷின் எம்பி கனவிற்கு அப்போதே ஆப்பு வைத்தவர் ஜெயலலிதா. அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் கைக்கு எட்டிய எம்பி பதவி கடைசி வரை சுதீஷூக்கு வாய்க்கு எட்டவே இல்லை.

இதற்கிடையே கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் வரை தமிழக அரசியல் களத்தில் பிரதான கட்சியாக இருந்த தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து படு தோல்வியை சந்தித்தது. அத்தோடு அந்த கட்சிக்கான முக்கியத்துவமும் குறைந்து போய்விட்டது. திமுக எவ்வளவோ முயன்றும் தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் ஐக்கியமானது. அந்த தேர்தலோடு தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுக கூட்டணிக்கு அழைத்த நிலையிலும் ஓவர் கெடுபிடி காட்டியதால் ஸ்டாலின் அந்தரத்தில் தவிக்கவிட்டார்.

இதனால் அதிமுக தரப்பு அடித்துப்பேசி தேமுதிகவை 4 தொகுதிகளுக்கு ஓகே சொல்ல வைத்தது. அப்போது தான் மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் என்று பேச்சுவாக்கில் அதிமுகவிடம் தேமுதிக வாக்குறுதியை பெற்றதாக சொல்கிறார்கள். அதற்கு எம்பி சீட் கொடுப்பது குறித்து பரிசீலிக்கிறோம் என்று தான் அதிமுக தரப்பில் இருந்து பிரேமலதாவிடம் அப்போது உறுதிமொழி கொடுத்ததாகவும், நிச்சயமாக மாநிலங்களவை எம்பி பதவி தருவதாக அதிமுக தரப்பு உறுதிமொழி எல்லாம் எதுவும் கொடுக்கவில்லை என்கிறார்கள். ஆனால் கூட்டணி தர்மத்தின் படி தேமுதிகவிற்கு எம்பி பதவி கொடுத்தே ஆக வேண்டும் என்று பிரேமலதா பிடிவாதம் காட்டுகிறார்.

ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஓபிஎஸ், இபிஎஸ் தங்கள் வேலையில் மும்முரமாக இருந்து வருகின்றனர். இதற்கு இடையே முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்த சுதீஷ், தங்களுக்கு ஒரு எம்பி சீட் வேண்டும் என்றும் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம் என்று கூறியதாகவும் ஆனால் அதனை வெளிப்படையாகவே எடப்பாடியார் மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இதனால் எரிச்சல் அடைந்த பிரேமலதா, கூட்டணியை விட்டு வெளியேறிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

தேமுதிகவை பொறுத்தவரை தேர்தல் முடிந்துவிட்டால் கூட்டணிக்கு குட்பை சொல்லும் வழக்கம் உடைய கட்சி. ஆனால் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகும் அதிமுகவுடன் ஒட்டி உறவாடியதற்கு காரணம் இந்த ராஜ்யசபா எம்பி சீட் தான். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை என்றால் எதற்காக அதிமுகவுடன் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று பிரேமலதா திட்டவட்டமாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த சூழ்நிலையில் தான் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை  சந்தித்த சுதீஷ், மாநிலங்களவை சீட் இல்லை என்றால் தேமுதிக அதிமுக கூட்டணியில் நீடிக்காது என்று கெடுவிதித்துவிட்டு திரும்பியதாக சொல்கிறார்கள். ஆனால் இதை அதிமுக தரப்பு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அக்கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

click me!