மருத்துவ ஊழியர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு..! அன்புமணி அதிரடி கோரிக்கை..!

By Manikandan S R SFirst Published Mar 18, 2020, 5:26 PM IST
Highlights

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவை புரியும் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இலவசமாக ஆயுள் காப்பீட்டு பாலிசியும், அவர்களுக்கு சிறப்பு ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 147 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். 125 இந்தியர்களும் 25 வெளி நாட்டவர்களும் கொரோனா பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்தியாவில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் கொரோனா பாதிற்பிற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  அதன்படி, தமிழகத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவை மார்ச் 31 ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கிப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட ஒட்டுமொத்த மருத்துவதுறையும் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்..!

வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவை புரியும் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இலவசமாக ஆயுள் காப்பீட்டு பாலிசியும், அவர்களுக்கு சிறப்பு ஊதியமும் வழங்குமாறு அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss)

 

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அளிக்க வேண்டும் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், #கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவை புரியும் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இலவசமாக ஆயுள் காப்பீட்டு பாலிசியும், அவர்களுக்கு சிறப்பு ஊதியமும் வழங்குமாறு அரசுகளை கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அடக்கமுடியாத கோபமும் ஆத்திரமும் வருது..! மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த சீமான்..!

click me!