Chennai Floods: சினிமாவில் பலர் ரீல் ஹீரோ.. களத்தில் இவர் ரியல் ஹீரோ.. பெண் ஆய்வாளருக்கு அன்புமணி பாராட்டு..!

Published : Nov 12, 2021, 10:34 AM ISTUpdated : Nov 12, 2021, 10:40 AM IST
Chennai Floods: சினிமாவில் பலர் ரீல் ஹீரோ.. களத்தில் இவர் ரியல் ஹீரோ.. பெண் ஆய்வாளருக்கு அன்புமணி பாராட்டு..!

சுருக்கம்

ஆய்வாளர் இராஜேஸ்வரி வட சென்னையில் பல இடங்களில் பணியாற்றிய போது அவர் ஆற்றிய மக்கள் நலப் பணிகளையும், கொடிய குற்றவாளியை கைது செய்ததற்காக வீரதீர பதக்கம் பெற்றவர் என்பதையும் நான் அறிவேன். அர்ப்பணிப்புடன் கூடிய காவல் பணிக்கு அவர் சிறந்த முன்னுதாரணம்! என பதிவிட்டுள்ளார்.

சென்னையில் மயங்கிக் கிடந்த இளைஞரை தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரின் செயலுக்கு அன்புமணி பாராட்டு தெரிவித்துள்ளார். 

சென்னையில் கனமழை கொட்டிவரும் நிலையில், மாநகராட்சி உள்ளிட்ட பிற துறையினருடன் இணைந்து காவல் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி போலீஸாருடன் அங்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க;- உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது.. அனைவரது சேவைக்கு தலைவணங்குகிறேன்.. முதல்வர் நெகிழ்ச்சி பதிவு.!

அங்கு கல்லறைகளுக்கு நடுவே இளைஞர் ஒருவர் அசைவற்ற நிலையில் இருந்தார். இதையடுத்து ஆய்வாளர், இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை செய்துள்ளார். அப்போது அந்த இளைஞரின் உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை தனது தோளில் தூக்கிச் சென்று அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து அதில், அந்த இளைஞரை ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்போது அந்த இளைஞர் நலமுடன் உள்ளார். மயங்கிக் கிடந்தவர் ஷெனாய் நகரைச் சேர்ந்த உதயா (25) என்பதும், அவர் கல்லறையில் தங்கிப் பணி செய்து வருவதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இவரின் இந்த செயலுக்கு கமல்ஹாசன், சென்னை காவல் ஆணையர் மற்றும் சமூக வலைதளங்களிலும்  பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், வெற்றுக் கால்களுடன் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்து உயிரைக்காப்பாற்றிய அண்ணாநகர் காவல் ஆய்வாளர்  இராஜேஸ்வரிக்கு அன்புமணி பாராட்டு தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- ரிப்பன் பில்டிங்க் மூழ்க காரணமானவரை தூக்கியடித்த கமிஷனர்... அடம்பிடிக்கும் அதிகாரி..!

இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னை டி.பி.சத்திரத்தில் மரம் முறிந்ததில் இறந்து விட்டதாக கருதப்பட்டவரை , வெற்றுக் கால்களுடன் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்து உயிரைக்காப்பாற்றிய அண்ணாநகர் காவல் ஆய்வாளர்  இராஜேஸ்வரிக்கு பாராட்டுகள். சினிமாவில் பலர் ரீல் ஹீரோ... களத்தில் இவர் ரியல் ஹீரோ!

 

 

ஆய்வாளர் இராஜேஸ்வரி வட சென்னையில் பல இடங்களில் பணியாற்றிய போது அவர் ஆற்றிய மக்கள் நலப் பணிகளையும், கொடிய குற்றவாளியை கைது செய்ததற்காக வீரதீர பதக்கம் பெற்றவர் என்பதையும் நான் அறிவேன். அர்ப்பணிப்புடன் கூடிய காவல் பணிக்கு அவர் சிறந்த முன்னுதாரணம்! என பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!