டாஸ்மாக் கடைகளை அகற்ற பாமகவினர் போராட்டம் – சென்னையில் எம்பி அன்புமணி கைது

 
Published : Mar 01, 2017, 12:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
டாஸ்மாக் கடைகளை அகற்ற பாமகவினர் போராட்டம் – சென்னையில் எம்பி அன்புமணி கைது

சுருக்கம்

It will eliminate the stress outlets across the mouthpiece on behalf of the demonstration protests were held

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

கடந்த வாரம் முதலமைச்சர் எடப்ப்பாடி பழனிச்சாமி, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து டாஸ்மாக் கடைகள் முன், இன்று காலை பாமக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். கடையை திறக்க வந்த டாஸ்மாக் ஊழியர்களை, முற்றுகையிட்டு கடையை திறக்க விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் கடைக்கு பூட்டு போடவும், கடையில் உள்ள பெயர் பலகையை மறைக்கவும் செய்தனர்.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அன்புமணி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு இருந்தனர். அப்போது, டாஸ்மாக் கடையின் பெயர் பலகையில், சட்ட விரோத கடை என்ற போஸ்டரை ஒட்டி, அன்புமணி மறைத்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அன்புமணி உள்பட பாமகவினர் அனைவரையும் கைது செய்தனர். பின்னர், அந்தந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு