புனித ரமலான் மாதத்தில் நீங்களும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று நம்புகிறேன். இந்தியாவில் முஸ்லீம்களின் அவல நிலை குறித்த உங்களின் சமீபத்திய அறிக்கைகளை வைத்து இந்த கடிதத்தை உங்களுக்காக எழுதுகிறேன்...
நீங்கள் முஸ்லீம் கொள்கையின் கொடி ஏந்தியவாக உங்களை முன்னிறுத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லீமின் (AIMIM)ன் தலைவராக உள்ள நீங்கள் பிரிவினைவாத அரசியலை செய்வதாகவும், பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறீர்கள். இந்தியா முழுவதும் பல்வேறு தேர்தல்களில் உங்கள் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், இந்திய முஸ்லீம்கள் உங்களின் தந்திரங்களை தவிடுபொடியாக்கி, உங்கள் எதிர்மறை அரசியலை நிராகரிப்பதாகவும் தெரிகிறது. இவைகளையெல்லாம் தயவு செய்து கவனத்தில் கொண்டு முடிந்தால் உங்கள் தவறுகளை திருத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்களின் சமீபத்திய அறிக்கைகளைப் பார்த்தால் உங்களது அரசியல் முழுக்க முழுக்க பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் கதையை விரிவுபடுத்தவதை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவாகிறது. பிப்ரவரியில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய வார்த்தைகளை தவறாக புரிந்துகொண்டு, பெரும்பான்மை சமூகத்தின் நிழலில் முஸ்லீம்கள் வாழ்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினீர்கள். மார்ச் 2023ல் தனியார் தொலைக்காட்சியில் பேசிய நீங்கள், முஸ்லீம்கள் கூலியாட்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது அரசாங்கத்தின் முன்னுரிமை அல்ல என்றும் நீங்கள் தெரிவித்தீர்கள். ராம நவமி, மற்றும் ரம்ஜான் அன்று நாடு முழுவதும் நடந்த சில சம்பவங்களுக்குப் பிறகு நாடு முழுவது் உள்ள முஸ்லீம்கள் பயமுறுத்தப்படுவதாக நீங்கள் அவசர அவசரமாக எச்சரிக்கை செய்தீர்கள்
இந்த எச்சரிக்கை அரசியல் உங்கள் யுக்தியாக மாறிவிட்டது. ஹைதரபாத்தை மையமாக கொண்ட கட்சியாக இருந்து, உங்கள் AIMIM இந்திய அரசியல் அதிகாரத்தை நோக்கி புறப்பட்டது. உங்கள் எண்ணங்கள், முஸ்லீம்களை இந்துக்களுக்கு எதிராக நிறுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. முஸ்லீம் சமூகத்தின் அரசியல், சமூக பொருளாதார அபிவிருத்தி தொடர்பான உண்மையான பிரச்சனைகளை நீங்கள் அரிதாகவே எழுப்பியுள்ளீர்கள். உங்கள் அரசியிலின் ஒரே தாக்கம் முஸ்லீம்கள் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டதுதான்.
ஆனால், அடையாள அரசியல் மற்றும் மதத்தின் பெயரில் அரசியல் பயன்பாடு இருந்தபோதிலும், இந்திய முஸ்லிம் சமூகம் இதுவரை உங்கள் மீது கவனம் செலுத்தவில்லை என்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. ஒரு சாதாரண முஸ்லிமின் அன்றாட வாழ்வில், தேர்தலை எதிர்கொள்ளும் போது மதம் வெற்றியை தீர்மானிப்பதில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அது நிச்சயமாக முக்கியமல்ல என்பதை நீங்களும் நன்றாக அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன். மற்ற இந்தியர்களைப் போலவே வளர்ச்சிப் பற்றாக்குறைதான் முஸ்லிம்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்கிறது. முஸ்லிம் வாக்காளர்களின் கல்வி, சுகாதாரம், மற்றும் வாழ்வாதரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சிறந்த தொலைநோக்கு பார்வையை முன்வைக்கும் கட்சிக்கே அவர்களின் ஆதரவைப் பெறுகிறது. பல்வேறு மாநிலங்களில் நல்ல நிதியுதவியுடன் அதிக பிரச்சார கூட்டங்களை நடத்திய போதிலும் உங்கள் AIMIMக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விகள் உங்கள் பேச்சுத் திறனுக்கு முன்னால் முஸ்லிம்கள் அடிபணியவில்லை என்பதற்கு சான்றாகும்.
சில புள்ளிவிவரங்கள் உங்களுக்காக தருகிறேன்... 2019 மகாராஷ்டிரா தேர்தலில் உங்கள் கட்சி 44 இடங்களில் போட்டியிட்டு 2ல் மட்டுமே வெற்றி பெற்றது. 2021 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி முஸ்லிம் மக்களையே வேட்பாளராக நிறுத்திய போதும் ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியவில்லை. 2022ல் பீகாரில் உங்களுடன் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து AIMIM-லிருந்து ஐந்து எம்.எல்.ஏ.,க்களில் 4 பேர் விலகி ஆர்ஜேடி கட்சியில் சேர்ந்தனர். ஆனால் 2022 உத்தரபிரதேச தேர்தலில் AIMIM தான் போட்டியிட்ட 100 இடங்களில் டெபாசிட் இழந்து கப்பெரிய பின்னடைவை சந்தித்தது. 403 சட்டமன்றத் தொகுதிகளில், உ.பி.யின் முஸ்லிம் வாக்காளர்கள் மக்கள் தொகை 20% ஆக இருக்கும்போதும் உங்கள் கட்சிக்கு வெறும் 0.43% வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்த எண்கள் உங்களுக்கு சொல்ல வருவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
உங்கள் அரசியலில் தொலைநோக்கு பார்வை இல்லை என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும். 1947-ல் சுதந்திரம் பெற்ற உடனேயே இந்தியாவை ஒன்றிணைப்பதற்கு எதிராக ரசாக்கர்களை அணிதிரட்ட உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பின் வாரிசு நீங்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். AIMIM இன் தாய்க் கட்சியான MIM (மஜ்லிஸ் இதிஹாதுல் முஸ்லிமூன்) தலைவர் காசிம் ரஸ்வி 1948 முதல் சிறையில் அடைக்கப்பட்டார். 1957 ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதை எதிர்த்ததற்காக, ரஸ்வி கட்சியின் ஆட்சியை அப்துல் வாஹத் ஓவைசியிடம் ஒப்படைத்தார், அவர் அதை AIMIM-ஆக மீண்டும் தொடங்கினார். அப்துல் வாஹத் ஓவைசியின் மகன் சுல்தான் சலாவுதீன் ஒவைசி, உங்கள் மதிப்பிற்குரிய தந்தை, புதிய கட்சியின் தலைவராக ஆனார், 2008 இல் நீங்கள் பொறுப்பேற்கும் வரை அவர் தொடர்ந்து அமைப்பை வழிநடத்தினார்.
உங்களின் அரசியல் வெற்றி எப்போதும் இந்து-முஸ்லிம் பிரிவினையை அதிகப்படுத்துவதைச் சார்ந்தது என்பதில் சந்தேகமில்லை. சமூகங்களுக்கிடையில் பேச்சு சுதந்திரத்தை இந்தியா கொண்டுள்ளது என்பதையும், சமய நல்லிணக்கம் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் தவிர, இந்து-முஸ்லிம் பிரிவினைகள் பொருத்தமற்றதாக மாறும் இடங்கள் இன்றைய இந்தியாவில் மிகவும் பொருத்தமானதாகத் தொடர்கிறது. கரீப் நவாஸ் ஹஸ்ரத் மொய்னுதீன் சிஸ்டியின் (ஆர், ஏ) வழித்தோன்றல் என்ற முறையில், எனது அன்றாட அனுபவம் எனக்குச் சொல்கிறது, இந்து சமூகம் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணி நேரமும் தங்கள் முஸ்லிம்ம் சகோதரர்களை அரவணைக்கும் அளவுக்கு பெரிய இதயம் கொண்டது. பல்வேறு பகுதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களைப் போலவே, நான் ஒவ்வொரு நாளும் இந்த புனித ஆலயத்தின் வளாகத்தில் அதைக் காண முடிகிறது. இந்திய வாழ்க்கை முறை அதன் இயல்பிலேயே உள்ளடக்கியது மற்றும் எந்த வேறுபாடுகளுக்கும் பாகுபாடுகளுக்கும் இடமில்லை.
சமூகங்களைப் பிளவுபடுத்தி அரசியல் அதிகாரம் தேடும் அரசியல்வாதிகளை முறியடிக்கும் எனது சிறிய முயற்சியே இந்த கடிதம், அதே நேரத்தில் சர்வமத நல்லிணக்கத்தையும் மேம்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்.
நாடு முன்னேறும் போது, நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள் என்பதையும், வளமான மற்றும் இணக்கமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான பொதுவான இலக்கை நோக்கி செயல்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். நீங்கள் என் கடிதத்தை படித்து, நேர்மறையின் தூதராக மாறுவீர்கள், முஸ்லிம்களை அழிவுக்கு இட்டுச் செல்லும் செயல்களில் இருந்து மாறுவீர்கள் என்று நம்புகிறேன்.
-சையத் நசீருதீன் சிஷ்டி
(சையத் நசீருதீன் சிஷ்தி அகில இந்திய சூஃபி சஜ்ஜாதன்ஷின் கவுன்சிலின் தலைவர் மற்றும் அஜ்மீர் தர்காவின் ஆன்மீகத் தலைவரின் வாரிசு. கருத்துகள் தனிப்பட்டவை.)
சாம்ராஜ்நகர் சபிக்கப்பட்ட பகுதியா? அரசியல்வாதிகள் அங்கு செல்வதைத் தவிர்ப்பது ஏன்?
மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பை உயிர்பிக்க திட்டம்..? என்ஐஏ தகவலால் பரபரப்பு