ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்.! மீறி விளையாடினால் 3 மாதம் சிறை தண்டனை

By Ajmal Khan  |  First Published Apr 10, 2023, 4:08 PM IST

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மசோதாவிற்கு ஆளுநர் ரவி தற்பொழுது ஒப்புதல் அளித்துள்ளார்.


ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழத்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இதனையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் இந்த மசோதாவிற்கு தடை விதித்தது.

Tap to resize

Latest Videos

மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா

இதனையடுத்து திமுக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றதும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்தது. இதற்காக சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு தரப்பில் கருத்துகளும் கேட்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்க மறுத்தார். மேலும் தமிழக அரசுக்கு சட்டம் இயற்ற அனுமதி இல்லையெனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை -ஆளுநர் ஒப்புதல்

இந்தநிலையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கு அரசியில் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்த நிலையில், இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை விளையாட முடியாதபடி தடை ஏற்பட்டுள்ளது. மீறி இந்த விளையாட்டை விளையாடினால் 3 மாதம் சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேந்து விதிக்கப்படும் என சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 11 கோடிக்கு கணக்கு இல்லை - பரபரப்பு புகார் கூறிய பிடிஆர்

 

click me!