
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் இபிஎஸ், ஒபிஎஸ் தரப்புக்கும் டிடிவி தினகரன் தரப்புக்கு அனல் பறக்கும் வாதம் நடைபெற்று வருகிறது.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து பன்னீர்செல்வமும் சசிகலா தரப்பும் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது.
இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து இரு தரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வந்தது.
இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்தாலும் டிடிவி தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் கட்சி எங்களுக்கே சொந்தம் என கூறி வருகிறது.
மேலும் இருதரப்பும் தங்களுக்கே கட்சியும் சின்னமும் தரவேண்டும் என கோரி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வந்தனர்.
அக்டோபர் 31 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 10 ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதில், ஒபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்களும் டிடிவி திஅனக்ரன் தரப்பு வழக்கறிஞர்களும் வாதடி வருகின்றனர்.
எடப்பாடி அணியுடன் ஒபிஎஸ் அணி இணைந்து கட்சி ஒன்றாக உள்ளது எனவும் அதிமுக பிளவு படவில்லை எனவும் ஒபிஎஸ் தரப்பு வாதாடி வருகின்றனர்.
தொடர்ந்து வாதாடிய டிடிவி தரப்பு பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டது. ஆனால் அவகாசம் கொடுக்ககூடாது என ஒபிஎஸ் தரப்பு வாதாடி வருகின்றனர்.
இதனால் வாத முடிவு என்னவாக இருக்கும் என அனைவரிடமும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.