காலியாகும் அமமுக கூடாராம்.. முக்கிய பிரமுகர்களை கொக்கி போட்டு தூக்கும் எடப்பாடியார்.. அதிர்ச்சியில் டிடிவி.!

Published : Jun 28, 2021, 06:49 PM IST
காலியாகும் அமமுக கூடாராம்.. முக்கிய பிரமுகர்களை கொக்கி போட்டு தூக்கும் எடப்பாடியார்.. அதிர்ச்சியில் டிடிவி.!

சுருக்கம்

அமமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுக, தேமுதிக உள்ளிட்ட சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இதில், அமமுக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுதோல்வி அடைந்தது. அக்கட்சியில் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும் தோல்வி அடைந்தார். இதனால், இனி மேல் அமமுகவில் இருந்தால் அரசியல் எதிர்காலம் கிடையாது என்பதால் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் தினகரனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாதன் ஆகியோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

இந்நிலையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் பொன்.ராஜா, சென்னை மத்திய மாவட்ட அமமுக செயலாளர் சந்தான கிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்ட அமமுக செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகிய 3 பேரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அடுத்தடுத்து அமமுக நிர்வாகிகள் அதிமுக மற்றும் திமுகவில் இணைந்து வருவது டிடிவி.தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!
சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை