எடப்பாடி பழனிசாமிக்கு தேவையில்லாமல் அதிகாரத்தை கொடுத்து விட்டேன்... புலம்பும் சசிகலா..!

Published : Jun 28, 2021, 06:07 PM IST
எடப்பாடி பழனிசாமிக்கு தேவையில்லாமல் அதிகாரத்தை கொடுத்து விட்டேன்... புலம்பும் சசிகலா..!

சுருக்கம்

கொங்கு மண்டலத்து மக்கள் நம்ம தலைவர் மீதும், அம்மா மீதும் அதிக பாசம் கொண்டவர்கள். அந்த மக்களும் அதிமுகவுக்கு தான் ஓட்டு போட்டு பழக்கப்பட்டவர்கள்.

தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலு. இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில தலைவராக இருந்தார். தற்போது, அமமுகவில் ஜெயலலிதா பேரவை மாநில துணைத்தலைவராக உள்ளார். இவரை தொடர்புகொண்டு சசிகலா பேசிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் சசிகலா,’’நான் பெங்களூருவில் இருந்து வரும்போது சொன்னேன், கேட்கவில்லை. இப்போ ஆட்சியை இழந்து நிக்கிறாங்க.

தொண்டர்களுடன் சேர்ந்து கட்சியை நல்லபடியாக வழிநடத்த வேண்டும் என்று தான் ஆசை. அதை நிச்சயமா செய்வேன். கொங்கு மண்டலத்து மக்கள் நம்ம தலைவர் மீதும், அம்மா மீதும் அதிக பாசம் கொண்டவர்கள். அந்த மக்களும் அதிமுகவுக்கு தான் ஓட்டு போட்டு பழக்கப்பட்டவர்கள். அந்த மக்களின் பிரியத்தை நான் எடுத்துக்கிட்டேன். அதன் அடிப்படையில் தான் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கணும் அப்படி நினைத்து தான் எதார்த்தமாக கொடுத்திட்டு போனேன். வேற எந்த நோக்கமும் இல்லை. அந்த நேரத்தில் எதுவும் நினைக்கவில்லை’’ என கூறியுள்ளார் சசிகலா.

PREV
click me!

Recommended Stories

நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!
சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை