கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய அமமுக வேட்பாளர்... அதிர்ச்சியில் டி.டி.வி. தினகரன்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 25, 2021, 6:40 PM IST
Highlights

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் குருவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.  இந்நிலையில், வேட்பாளர்கள் கொரோனா மற்றும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாகவே ஆயிரத்தைக் கடந்து கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை கடந்து தற்போது கொரோனா அரசியல் களத்திற்குள் புகுந்தது கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பொன்ராஜ் மற்றும் சந்தோஷ்பாபு ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், தேமுதிகவில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், எல்.கே.சுதீஷ் ஆகியோருக்கு தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சளி தொல்லை இருந்ததையடுத்து பார்த்தசாரதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதேபோல் இன்று காலை விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் குருவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இப்படி அடுத்தடுத்து வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவதால், இந்த முறை வேட்பாளர்கள் இல்லாமல் ஆதரவாளர்கள், நண்பர்கள் மட்டுமே வாக்கு சேகரிக்கும் படலமும் அரங்கேறி வருகிறது. 

click me!