திடீர் திருப்பம்.. அதிமுகவில் இணைந்த அமமுக வேட்பாளர்.. தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கமணி..!

Published : Apr 04, 2021, 10:36 AM ISTUpdated : Apr 04, 2021, 11:47 AM IST
திடீர் திருப்பம்.. அதிமுகவில் இணைந்த  அமமுக வேட்பாளர்.. தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கமணி..!

சுருக்கம்

சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் சந்திரன் என்பவர் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் டிடிவி.தினகரனை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் சந்திரன் என்பவர் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் டிடிவி.தினகரனை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற  உள்ளது. இதனால், அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர் வெயிலையும் பொருட்படுத்தாமல் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பொன்.சரஸ்வதிக்கு ஆதரவு திரட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளரும், நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் கொல்லிமலை பி.சந்திரன் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். நிகழ்ச்சியின்போது சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. பி ஆர் சுந்தரம், பொன் சரஸ்வதி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலரும் உடனிருந்தனர். 

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் அமமுக வேட்பாளர் அதிமுகவில் இணைந்த சம்பவம் டிடிவி.தினகரனை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி;- சேந்தமங்கலத்தில் அமமுக வேட்பாளராக போட்டியிட இருந்த பி சந்திரன் எடப்பாடியார் தலைமையில் அமைய வேண்டும் என்பதற்காக தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார் இனி அவர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி எடப்பாடி யாரின் அலை தமிழகத்தில் வீசுகிறது என்பதற்கு அடையாளமாக விளங்குகிறது என்றார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!