அதிமுக - அமமுக இணையுமா? டி.டி.வி தினகரன் ஓபன் டாக்..!

Published : Jan 28, 2021, 03:52 PM IST
அதிமுக - அமமுக இணையுமா? டி.டி.வி தினகரன் ஓபன் டாக்..!

சுருக்கம்

அதிமுகவும், அமமுகவும் இணையுமா? என்ற கேள்விக்கு அமமுகவின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் பதில் அளித்துள்ளார். 

அதிமுகவும், அமமுகவும் இணையுமா? என்ற கேள்விக்கு அமமுகவின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் பதில் அளித்துள்ளார். 

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டிளிக்கையில்;- சசிகலாவை மருத்துவர்களைச் சந்தித்து, எப்போது அழைத்துச் செல்லலாம் என்று ஆலோசிக்கவிருக்கிறோம். ஓய்வு தேவைப்படும் பட்சத்தில், பெங்களூருவிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்வது பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்த பின்னரே சொல்ல முடியும்.

சசிகலா விடுதலையாகும் நாளில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்க்கும்போது, சசிகலாவின் விடுதலையை அதிமுகவினர் சென்னையிலிருந்தபடியே கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்றார். அதிமுக - அமமுக இணையுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

பதிலளிக்க மறுத்த தினகரன் இந்த நேரத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. சித்தி விடுதலையான மகிழ்ச்சியில் இருக்கிறோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதே அதிமுகவை மீட்டெடுத்து அம்மாவின் உண்மையான ஆட்சியைக் கொடுக்கத்தான் என்றார்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!