
தமிழகத்தில் அம்மா விரைவில் ஆட்சி செய்வார் என, தேவகவுடா கடிதம் மூலம், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்து, மாற்று சிகிச்சை அளித்தார். அதை தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை, மருத்துவ சிகிச்சை குறித்து அறிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற முன்னாள் பிரதமர் தேவகவுடா வாழ்த்து தெரிவித்து, தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறி வருவதாக அறிந்து கொண்டேன். இதனால், நான் மகிழ்ச்சி அடைவதுடன், அவருக்கு எனது வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியா மற்றும் வெளிநாட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவர் பூரண குணமடைந்து, விரைவில் முழு நலம் பெற என்னுடைய வாழ்த்துக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் வாழ்த்து.
"விரைவில் ஆட்சி செய்வார் அம்மா" கடவுளும் மீண்டும் அவர், ஆட்சி செய்ய பூரண வரம் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.