திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கிய அழகிரி!! அதிர்ச்சியில் திமுக...

By sathish kFirst Published Sep 23, 2018, 12:22 PM IST
Highlights

கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு அவர் MLA வாக இருந்த தொகுதியான திருவாரூரில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதால் தந்து பிரச்சாரத்தை அழகிரி ஆரம்பித்துள்ளதால், திமுக தலைமை அதிர்ச்சியில் உள்ளது.

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, திமுகவில் உள்ள சர்ச்சைகளை நாடே அறியும். திமுகவின் முன்னான் தென்மண்டல செயலாளர் மு.க.அழகிரி இரண்டில் ஒன்று பார்த்துவிடும் தோரணையில் களத்தில் குதித்துள்ளார். ஸ்டாலினை பலமுறை கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு கெஞ்சி கூத்தாடி பார்த்துவிட்டார். ஆனால், ஸ்டாலினிடம் அழகிரியின் பருப்பு ஒன்றும் வேகவில்லை.

இந்த நிலையில், சென்னையில் ஒரு லட்சம் பேர் கூடி ஊர்வலமாக சென்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்போவதாக தெரிவித்திருந்தார். இதன் மூலம் சென்னையை ஒரு உலுக்கு உலுக்கி ஒட்டுமொத்த தமிழகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கும் திட்டமாக இதை அவர் செயல்படுத்த இருந்தார். ஆனால், முதலுக்கு மோசம் என்பது போல மொத்தமே பத்தில் இருந்து 15 ஆயிரம் பேரை வரை டமட்டுமே பேரணியில் கலந்து கொண்டதால் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது.

இருப்பினும், விடுவதாக இல்லை அழகிரி. தொடர்ந்து கஜினி முகமது படையெடுப்பது போல ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டே இருக்கிறார். அந்த வகையில், திமுக தலைமையை திரும்பிப் பார்க்கும் வகையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த திருவாரூர் தொகுதிக்கு சென்று முகாமிட்டு அனைவர் பார்வையையும் அங்கு திருப்பி வருகிறார்.

அந்த வகையில், இன்று திருவாரூரின் முக்கிய பகுதியில், சில ஆயிரம் பேரைக் கூட்டி கருணாநிதிக்கு அஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்து விட்டார். இதில், அவரது மகன் துரைதயாநிதி, மதுரை முன்னாள் துணை வேந்தர் மன்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அழகிரி, தன்னோடு 400 பேர் அல்ல, 40 வந்தாலும் ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன் என பேசியுள்ளார்.

எது எப்படியோ, கூட்டம் வருகிறதோ இல்லையோ... தொடர்ந்து தன்னாலன முயற்சிகளை அழகிரி எடுத்துக் கொண்டே இருப்பதை இது காட்டுகிறது. இது மட்டுமின்றி தனது தந்தையின் தொகுதியான திருவாரூலில் தானே களத்தில் குதித்து போட்டியிட்டால் வெற்றி பாய்ப்பு எந்த அளவில் இருக்குமென நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களை களத்தில் இறங்கி சர்வே எடுத்து, ஆய்வு செய்துவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் திருவாரூரில் உள்ள முக்கிய வியாபார பிரமுகர்கள், சில திமுக முக்கியஸ்தர்கள், ஓட்டு வங்கி வைத்துள்ள சிறு சிறு பகுதி பிரமுகர்கள் என பலதரப்பட்டோரையும் அழகிரி மற்றும் அவரது ஆட்கள் தொடர்ந்து சந்தித்து வருவதால் திமுக தரப்பில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அழகிரி எடுத்து வரும் சர்வேக்களில் தனக்கு 20-லிருந்து 30 சதவீதம் வரை ஆதரவு இருந்தால் கூட போட்டியிடுவது நிச்சயம் என அடித்துக் கூறி வருகிறாராம் திமுக தலைமையின் நேர் எதிரி ஆகிவிட்ட மு.க.அழகிரி. இன்னும் சில நாட்கள் பொருத்திருந்த பார்க்கலாம் அழகிரியின் சர்வே என்ன சொல்கிற தென்று.

click me!