பதவியில் இருப்பவர்கள் நாகரீகமில்லாமல் நடந்து கொண்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும்... கர்ஜித்த எடப்பாடி!

Published : Sep 23, 2018, 12:06 PM ISTUpdated : Sep 23, 2018, 12:07 PM IST
பதவியில் இருப்பவர்கள் நாகரீகமில்லாமல் நடந்து கொண்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும்... கர்ஜித்த எடப்பாடி!

சுருக்கம்

பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் நாகரீகம் தெரியாமல் நடந்து கொண்டால் அவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் நாகரீகம் தெரியாமல் நடந்து கொண்டால் அவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், உள்ளாட்சி தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம், திருவாரூரில் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். 

எம்.எல்.ஏ. கருணாஸ் பற்றிய கேள்விக்கு, மக்கள் பிரதிநிதி அவ்வாறு பேசியிருக்கக் கூடாது. சட்டம் தன் கடமையை செய்யும். பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் நாகரீகம் தெரியாமல் நடந்து கொள்பவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செய்த சாதனைகள் நிலைத்து நிற்கிறது. இன்னும் புதிய திட்டங்களை நாங்கள் செய்ய இருக்கின்றோம். அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். எனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்றார். 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக என்பது அனைவருக்கும் தெரியும் அவர்களிடமே ஊழல் குறித்த கேள்விகள் கேட்க வேண்டும்.  

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முயட்றசித்து வருவதாகவும், பெட்ரோல் - டீசல் மத்திய அரசின்கீர் இருப்பதால், மத்திய அரசுதான் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தால், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். எனவே பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?
விஜய்யை சீண்டாதீங்க.. பாஜகவினருக்கு டெல்லி கொடுத்த 'சைலண்ட்' வார்னிங்.. மாஸ்டர் பிளான்!