அமித்ஷா அதிரடி பேச்சு..! வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும்..!

By ezhil mozhiFirst Published Oct 17, 2019, 7:08 PM IST
Highlights

இந்தியாவில் இருக்கும் ஆங்கில அதிகாரிகள் சிப்பாய்க் கலகம் என்று பூசி மெழுகியது கலகமோ, கலவரமோ இல்லை. அதை விரிவாக ஆராய்ச்சி செய்து அது இந்திய சுதந்திரப் போராட்டம்தான் என்பதை நிரூபிக்கும் "இந்திய சுதந்திரப் போராட்டம்-1857" என்னும் நூலை எழுதினார்.

அமித்ஷா அதிரடி பேச்சு..! வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும்..! 

வரலாற்றை மீண்டும் எழுதப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது பெரும்  வியப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் ஓர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய அமித்ஷா...

இந்தியாவில் இருக்கும் ஆங்கில அதிகாரிகள் சிப்பாய்க் கலகம் என்று பூசி மெழுகியது கலகமோ, கலவரமோ இல்லை. அதை விரிவாக ஆராய்ச்சி செய்து அது இந்திய சுதந்திரப் போராட்டம்தான் என்பதை நிரூபிக்கும் "இந்திய சுதந்திரப் போராட்டம்-1857" என்னும் நூலை எழுதினார். அது வெளிவரும் முன்பே தடை செய்யப்பட்டது...

வீர சாவர்க்கர் மட்டும் இல்லையென்றால் 1857 ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திர போர் என்ற வார்த்தையே நமக்கு தெரிந்து இருக்காது. மேலும் ஆங்கிலேயர்களின் பார்வையில் தான் வரலாறு எழுதப்பட்டிருக்கும். யாரையும் புண்படுத்தாமல் இந்திய வரலாற்றை இந்தியாவின் பார்வையில் மீண்டும் எழுதப்பட வேண்டும் என அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, "நம் பார்வையில் இந்திய வரலாற்றை எழுத வேண்டும்.நான் வரலாற்று அறிஞர்களை கேட்டுக்கொள்கிறேன். எவ்வளவு காலம் தான் நாம் ஆங்கிலேயேர்களை குறை சொல்லிக்கொண்டே இருப்போம்....நமக்கு யாரும் பகை கிடையாது. நம் இளம் தலைமுறையினருக்கு விக்கிரமாதித்யா போன்ற மாமன்னர்களை பற்றி அவ்வளவாக தெரிவதில்லை...அதற்கான காரணம் அவர்களை பற்றிய ஆவணங்கள் நம்மிடம் இல்லாததே.

உலக அளவில்  இந்தியாவின் பெரும் பேசப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பேசுவதாய் உலகையே சுற்று நோக்கி வருகிறது என பெருமையாக பேசி உள்ளார் அமித்ஷா. இருப்பினும் இந்தியாவின் பார்வையில் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் என அமித்ஷா தெரிவித்து உள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!