அமி்த் ஷாவின் அடுத்த அதிரடி: தேசிய குடியுரிமை பதிவேடு நாடுமுழுவதும் கொண்டுவரப்படுமாம்

By Selvanayagam PFirst Published Sep 18, 2019, 9:01 PM IST
Highlights

தேசிய குடியுரிமை பதிவேடு(என்ஆர்சி) நாடுமுழுவதும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா பேசியுள்ளார்
 

இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் சார்பில் ராஞ்சியில் புர்வோதே இந்துஸ்தான் என்ற நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் சட்டவிரோதமாக உள்ளே நுழைய முடியுமா, தங்கி இருக்கமுடியுமா. முடியாது அல்லவே. ஆனால், இந்தியாவில் மட்டும் வேறுநாட்டைச் சேர்ந்தவர்கள் எந்தவிதமான சட்டப்பூர்வ ஆவணங்களும் இன்றி தங்கி இருக்க எவ்வாறு அனுமதிக்க முடியும். அதனால்தான் தேசிய குடிமக்கள் பதிவேடு நாடுமுழுவதும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

அசாம் மாநிலத்தில் கொண்டுவந்திருக்கிறோம். இதை படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவோம். தேசிய அளவில் குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குவோம். நாட்டின் குடிமக்கள் யார் எனும் பட்டியலை தயாரிப்போம். இது அசாம் குடிமக்கள் பதிவேடு அல்ல, தேசிய குடிமக்கள் பதிவேடு
இந்த என்ஆர்சி சட்டம் மூலம் வெளிநாட்டவர் சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார்களா என்பதை கண்டறிய முடியும். சட்டவிரோதமாக ஒருவர் நாட்டுக்குள் உள்ளே வந்தாலும் நாட்டை கரையான் போல் சீரழித்துவிடுவார், ஆதலால் அவரைக் கண்டுபிடித்து  துரத்த வேண்டும்

என்ஆர்சிக்கு வெளியேற இருப்பவர்களுக்கு எதிராக என்ஆர்சி விதிப்படி நாம் அவர்களுக்கு எதிராகவே நடக்க வேண்டும். இதில் எந்தவிதமான அரசியலும் இல்லை. இதுதான் உண்மையான என்ஆர்சி.இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியல் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியானது. இதில் 19 லட்சம் மக்கள் விடுபட்டு இருந்தனர். இவர்கள் தீர்ப்பாயத்தில் முறையீட்டு தீர்வு பெற உத்தரவிடப்பட்டுள்ளது

click me!