இடது சாரிகளை கேரள மக்கள் தூக்கி எறிஞ்சிடுவாங்களாம் !! இப்படி சொல்றார் அமித்ஷா !!!

 
Published : Oct 18, 2017, 08:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
இடது சாரிகளை கேரள மக்கள் தூக்கி எறிஞ்சிடுவாங்களாம் !! இப்படி சொல்றார் அமித்ஷா !!!

சுருக்கம்

amithsha speech in kerala

கேரளாவில் இருந்து இடதுசாரிகளை பொத மக்கள் விரைவில் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்றும் அங்கு தாமரை மலரும் என்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் இடதுசாரிகளால் பா.ஜ.க.வினர் தொடர்ந்து கொல்லப்படுவதாகக் கூறியும் அதற்கு கண்டனம் தெரிவித்தும் அக்கட்சியின் சார்பில் ஜன் ரக் ஷா யாத்திரையை நடத்தி வருகின்றனர். இந்த யாத்திரையை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கடந்த 3-ஆம் தேதி கண்ணூரில் தொடங்கிவைத்தார்.
 

இந்த யாத்திரையின் நிறைவு விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது கேரளாவில் இருந்து இடதுசாரிகளை விரைவில் மக்கள் தூக்கியெறிவார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கேரளாவில் இடதுசாரி தலைமையிலான ஆட்சி அமையும் போதெல்லாம்  பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார். . கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை 30 பேரும், 2006ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 28 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என அமித்ஷா கூறினார்.

மேலும், இடதுசாரி தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது முதல் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு முதல் மந்திரி பினராயி விஜயன் பொறுப்பேற்க தயாரா என கேள்வி எழுப்பினார்.

அரசியலில் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதால் மக்கள் குறுகிய காலத்தில் இடதுசாரிகளை கேரளாவில் இருந்து தூக்கியெறியும் நிலை வெகு தூரத்தில் இல்லை என அமித்ஷா குறிப்பிட்டார்.

இடதுசாரிகளான நீங்கள் எங்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறீர்கள், ஆனால் நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

 

 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!