இவர்தான் பாஜக தலைவர் ! மாநிலத் தலைவர்கள் கூட்டத்தில் அதிரடி முடிவு !!

By Selvanayagam PFirst Published Jun 13, 2019, 8:03 PM IST
Highlights

டெல்லியில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவே தலைவராக தொடர முடிவு செய்யப்பட்டதால் அவரே பாஜக தலைவராக  தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சர்த பொறுப்பேற்றுக் கொண்டதால் அவருக்குப் பதில் அக்கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் அக்கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் அனைத்து மாநில பாஜக தலைவர்களும் பங்கேற்றார்கள். தமிழகம் சார்பில் தமிழிசை மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடந்தது.

அப்போது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களில் வெற்றி பெற அமித்ஷாவே காரணம் என்பதால் அவரே தலைவராக தொடர வேண்டும் என அனைத்து மாநில தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். 

இதையடுத்து பா.ஜ.க.வின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடருவார் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து அமித்ஷாவே தலைவராக இருக்க முடிவு எடுக்கப்பட்டது.

click me!